Yoga Programs

Ananda Chaitanya Yoga Programs

 Yoga is a wonderful science that offers the highest possibility for Mankind. 

It offers  physical benefits such as getting relieved from chronic illnesses such as asthma, blood pressure, diabetes, back ache, arthritis, sleep disorders etc.

Yoga brings highest level of focus in whatever you do there by bringing concentration, memory power, productivity and efficiency. 

It makes one free from mental ailments such as depression, anxiety, panic attack etc. But these benefits are not the purpose of Yoga. Realizing and experiencing  the true potential of ones inner nature is the true essence of Yoga. Ananda Chaitanya yoga programs are designed and customized to suit the modern mind. The scientifically structured program includes Asnans, Powerful pranayams and meditations along with  life tools for using in day to life that helps one to realise the essence of yogic science.  At present the programs are conducted online/offline. 

contact for details: [email protected] 

We welcome you join the Ananda Chaitanya Program,

A 7 day online yoga program that helps you to realise your true potential. Pranayam, meditation and yoga asanas that are taught in the program will help you live healthy and joyous life . The spiritual tools derived from the ancient yogic wisdom that are provided in the program will help you look at the life in a completely new dimension.

ஆனந்த சைதன்யா தியான மையம் திறப்பு விழா – முழு தொகுப்பு | Ananda Chaitanya Meditation Center

YouTube player

ஆனந்த சைதன்யா தியான மையம் திறப்பு விழா | Ananda Chaitanya Meditation Center Inauguration | கவனச்சிதறல் – இந்த நூற்றாண்டு மனிதனின் மிகப்பெரிய பிரச்சினை” எனும் தலைப்பில் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் உரை

YouTube player

ஆனந்த சைதன்யா தியான மையம் பிராணப்பிரதிஷ்டை விழா

YouTube player

கடந்த நவம்பர் 7 ஆம் தேதி 2024 (குரோதி வருடம், ஐப்பசி மாதம் 21 ஆம் நாள்) வியாழக்கிழமை காலை 5:30 மணிமுதல் 9 மணிவரை பூராட நட்சத்திரம், சஷ்டி திதி, சித்தயோகம் கூடிய சுபதினத்தில், கோவை குரும்பபாளையம் TRS அவென்யூவில் அமைந்துள்ள எங்கள் புதிய இல்லமான “ஆனந்த சைதன்யா தியான மையத்தில்” தேவி புவனேஸ்வரி சமேத யோக சதாசிவருக்கு பிராணப்பிரதிஷ்டை விழா இனிதே நடைபெற்றது. யோகா, தியானம் மற்றும் பிற நல வாழ்வுக்கான செயல்முறைகளை கற்பதற்கான தலமாக இந்த தியான மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் ஆன்மீக நண்பர்கள், தியான அன்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டு இறையருளுக்கு பாத்திரரானார்கள்.

இவ்விழாவில் கணபதி ஹோமம், புண்யாகவாசனம், திரவியாகுதி, மகா பூர்ணாகுதி, பிராணப் பிரதிஷ்டை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன, தொடர்ந்து மகா பிரசாத விநியோகம் செய்யப்பட்டது.

நல்வரவிற்கு நன்றிகள்!!!

அன்புடன்
திரு.தில்லை செந்தில் பிரபு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்

ஆனந்த சைதன்யா தியான மையம்
C ப்ளாக், சைட் நெ.2, TRS அவென்யூ,
குரும்பபாளையம், கோவை- 641 107
(ஆதித்யா பள்ளியின் பின்புற
நுழைவாயிலுக்கு அருகில்)


அன்றாட வாழ்வில் தியானம் | தில்லை செந்தில் பிரபு | முழுமையறிவு | குரு நித்யா நினைவு வகுப்புகள்

YouTube player

“In this video, Thillai Senthil Prabu, founder of Ananda Chaitanya Foundation, with more than two and a half decades of meditation and yoga teaching experience, delves into meditation and its profound benefits. He explains the role of the parasympathetic nervous system, the impact of uncontrolled mental chattering on our physical health, and how meditation enhances focus, productivity, and alleviates pain and psychosomatic diseases. Additionally, he addresses the positive effects of meditation on sleep disorders.”


ஆனந்த சைதன்யா யோகா மற்றும் தியான பயிற்சி வகுப்புகள்

  • உடல் ஆரோக்யம்.
  • மன வலிமை.
  • ஆன்மீக நலவாழ்வு.
  • உணர்வுகளின் சமநிலை.
  • அன்றாட வாழ்விற்கான ஆன்மீகக் கருவிகள்.
  • சக்திவாய்ந்த பிராணயாமா, யோகா மற்றும் தியான பயிற்சிகள்.

தியானம், உளக்குவிப்புப் பயிற்சி முகாம்

(Source: writer sri Jeyamohan’s blog page)

Oct 16, 2023 https://www.jeyamohan.in/192280/

சென்ற ஆண்டு முழுக்க நடைபெற்ற குரு தில்லை செந்தில் பிரபு நடத்திய தியானம் மற்றும் உளக்குவிப்புப் பயிற்சி முகாம்கள் மிகப்பெரிய அளவில் பயனுள்ளவையாக அமைந்தன என்று பங்கேற்றவர்கள் கூறினார்கள். இன்றைய வாழ்க்கையின் அடிப்படைச் சிக்கல்கள் சில உள்ளன. ஒன்று, துயிலின்மை. இரண்டு, கவனம் குவியாமை. மூன்று, உளச்சோர்வு. மூன்றும் ஒன்றுடனொன்று தொடர்புடையவை.  அவற்றைக் கருத்தில்கொண்டு அமைக்கப்பட்ட பயிற்சி முறை இது.

நம் உள்ளத்தை நம்மால் கையாள முடியாத நிலையில் நம்மிடம் எப்போதும் ஒரு சலிப்பு உள்ளது. அதை வெல்ல நம் உள்ளத்தை தொடர்ந்து எதிலாவது ஈடுபடுத்தியாகவேண்டியுள்ளது. உள்ளம் தீவிரமாக ஈடுபடுவது எதிர்மறையான விஷயங்களில்தான். அதையே நாம் ‘திரில்’ என்கிறோம். வன்முறை, காமம் ஓங்கிய சினிமாக்கள். அல்லது வம்புகள், சச்சரவுகள். இவை உடனடியாக நம்மை துயிலின்மைக்கும் சோர்வுக்கும் இட்டுச்செல்கின்றன.  எதையும் தொடர்ச்சியாக கவனிக்க முடியாதவர்களாக ஆகிறோம்.

கவனிக்கமுடியாத காரணத்தால் நாம் துளித்துளியாக கருத்துக்களையும், செய்திகளையும், காணொளிகளை பார்க்கவும் வாசிக்கவும் ஆரம்பிக்கிறோம். நூறு சொற்களுக்குள் அமைந்த முகநூல்பதிவுகள், ஐந்து நிமிடக் காணொளிகள் பெருகுவது இதனால்தான். உண்மையில் இவை நம்மை மேலும் சிதறடிக்கின்றன. தொகுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு செய்திகளை கொண்டுவந்து நம்முள் கொட்டி நம் உள்ளத்தை பெரிய குப்பைக் கிடங்காக ஆக்குகின்றன. ஆகவே நம் கவனிக்கும் திறன் மேலும் குறைகிறது. ஒரு நூலை கூர்ந்து பயில்வது கடினமாகிறது. ஒரு தொழில்முறை பயிற்சியை மேற்கொள்வது, ஒரு தேர்வுக்காக பயில்வது இயல்வதில்லை.

இந்த நச்சுச்சூழலுக்கு எதிராகவே இந்த தியானப் பயிற்சிகளை தொடங்கினோம். ஒரு பாதை இருக்கவேண்டும், அதை தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்காக. இது மதம் சார்ந்ததாகவோ, தனிநபர் வழிபாட்டுத்தன்மை கொண்டதாகவோ இருக்கலாகாது என்பதை முதன்மைப்படுத்தினோம். நான் பரிந்துரைக்கும் ஆசிரியர்களில் ஒருவர் தில்லை செந்தில் பிரபு

தில்லை செந்தில் பிரபு பல முக்கியமான தியான மையங்களில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயிற்சி பெற்றவர். Ananda Chaitanya Foundation என்னும் தியான அமைப்பை நடத்தி வருபவர். கல்விப்பணிகள், ஆளுமைப் பயிற்சிப்பணிகளை ஒருங்கிணைக்கிறார்.

திரு ஜெயமோகன்

எழுத்தாளர்


தியானமும் அதன் வழிமுறைகளும் | தில்லை செந்தில் | முழுமையறிவு | குரு நித்யா நினைவு பயிற்சி வகுப்புகள்

இந்த காணொளி உரையில், தில்லை செந்தில் பிரபு தியானம் பற்றிய ஆழமான ஆய்வை வழங்குகிறார், பண்டைய ஆன்மீக மரபுகளிலிருந்து அதன் தோற்றம் மற்றும் காலப்போக்கில் அதன் பரிணாமத்தை ஆராய்கிறார். அவர் தியானத்தின் அடிப்படைகள், பல்வேறு வகைகள் மற்றும் அவற்றின் தனித்துவமான அணுகுமுறைகள் மற்றும் அதன் பலன்களான உள்ளத் தெளிவு, உணர்ச்சி சமநிலை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான பலன்களை விவரிக்கிறார். தியானம் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இயல்பாக இணைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கும் அவர் உரையாற்றுகிறார், அது பல்வேறு ஆன்மீக மரபுகளில் வேர்களைக் கொண்டிருந்தாலும், அதன் சாராம்சம் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை தெளிவுபடுத்துகிறார்.
நம்பிக்கைகள் தாண்டி அனைவரும் அணுகக்கூடிய தன்னை அறிதலுக்கான மற்றும் உலகியல் வளர்ச்சிக்கான உலகளாவிய கருவியாக தியானம் வழங்கப்படுகிறது

YouTube player

யோகம் – தியானம் | முழுமையறிவு | Unified Wisdom | ஒருங்கிணைந்த கல்வி | குரு நித்யா பயிற்சி வகுப்புகள்

YouTube player

www.unifiedwisdom.guru

முழுமையறிவு அமைப்பு வெளியீடு

தொடர்புக்கு : www.unifiedwisdom.guru
ஆன்மிகம், கலை, இலக்கியம், அறிவியல் என அனைத்துத் துறைகளையும் ஒன்றாக்கி அறியும் மெய்மையை முன்வைப்பது முழுமையறிவு அமைப்பு. அதற்கான தொடர் பயிற்சிகளை அளித்து வருகிறது.
மின்னஞ்சல் : [email protected]

இது எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் Unified Wisdom – முழுமையறிவு எனும் யூடியூப் தளத்தில் 16 ஏப்ரல், 2024 அன்று  யோகம் – தியானம் | முழுமையறிவு | Unified Wisdom |ஒருங்கிணைந்த கல்வி | குரு நித்யா பயிற்சி வகுப்புகள் என்ற தலைப்பில் வெளியான காணொளியின் தொகுப்பு.


Ananda Chaitanya Foundation has become associate center of Indian yoga association.

We are happy to announce that our foundation has become Associate center of Indian yoga association

Few Sharings of Ananda Chaitanya Yoga Program Participants

YouTube player
YouTube player
YouTube player
YouTube player
YouTube player
YouTube player
YouTube player

Few sharings of Ananda Chaitanya Yoga program participants

Abirami, Coimbatore

I am Abirami, I am studying in Sri Krishna College of Engineering and Technology and I attended the ananda chaitanya yoga class from 8th to 14th April.
I learned new pranayamas and meditations. This session is very useful for me. I practice every morning. Every morning I feel fresh since the day I started practicing yoga. I get rid of stress, anxiety and anger. It helps me to think steadily without getting distracted in my studies

N. Venkatesh, Coimbatore

ஆனந்த சைதன்யா யோகா மற்றும் தியான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற பிறகு நான் செய்யும் செயல்களில் 100% ஈடுபாட்டுடன் செய்ய முடிகிறது. மனம் அமைதியாகவும் தெளிவாகவும்‏ இருப்பதை உணர்கிறேன். எல்லையற்ற பொறுப்புகளுடன் முழுமனதுடன் செயல்களை ஏற்றுக்கொள்கிறேன்,

நன்றி.

K. Manikandan, Coimbatore

It was really a blissful event, I had no thoughts in mind during the practice. My mind was fully free on that time.I really don’t know how long I did the practice. I am really wondering how I did the exercise, the time went fast. After opening the eyes, I feel more free in my mind and soul. In the beginning, I thought I am sleeping, but my mind only slept. I am really very thankful to you for giving this wonderful experience. I am very eager to do the yogic exercise regularly.