தியானமுகாம், கடிதம் – செல்லதுரை

அன்புள்ள ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கு,

தில்லை செந்தில்பிரபு அவர்களின் இரண்டாம் தியானப் பயிற்சி முகாமில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது பல்வேறு வகையில் வாழ்வின் மிகச் சிறந்த நிலைகளை கற்கும் வாய்ப்பாக எனக்கு அமைந்தது.

அன்புடன், அக்கறையுடன், தோழமையுடன், புன்சிரிப்புடன், முழு அர்ப்பணிப்புடன், ஒரு மனிதன் வாழ்வில் அடைய வேண்டிய மிக சிறந்த வாழ்வியல் நிலைகளை விளக்கி, உணர்த்தி, அவற்றை அடைய பயிற்சி அளித்து, கலந்துரையாடி, சரி செய்து  என முகாம் முழுவதும் ஆசான் செந்தில்பிரபு அவர்கள் பங்கேற்பாளர்களை அணுகியவிதம் அவர் அளித்த இறுக்கம் இல்லாமல் மிகச்சிறந்த கற்றல்களை இலகுவாக உள்வாங்கும் வாய்ப்பை எனக்கு அளித்தது. இது முழுமையை அடைவதற்கான ஒரு தொடர் பயிற்சி. ஆகவே முகாமுடன் இது நிறைவடையவில்லை, துவங்குகிறது எனும் தெளிவு அளிக்கப்பட்ட பயிற்சிகளின் ஆழத்தை உணர்த்தியது. ஆசான் செந்தில்பிரபு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அந்தியூர் மணி, அஜிதன், பங்கேற்ற நண்பர்கள், உணவு தயார் செய்த அம்மாக்கள் என அவரவர் நிலையில் வெளிப்படுத்திய இயல்பான அன்பும், அக்கறையும், கனிவான பேச்சும் சூழலை மென்மேலும் அன்பிற்கும் மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கிய அம்சங்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்பான வரவேற்பு, சிறந்த கற்றல், அருமையான சூழல், அருமையான உணவு என அனைத்து வகையிலும்  அனைத்தையும் இணைத்து ஒரு நல்லதொரு கற்றல் வாய்ப்பை அன்புடன் உருவாக்கி தந்த / தந்து வரும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இதற்கு பின்புலமாக இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்,

செல்லதுரை


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

https://www.jeyamohan.in/183444/ இது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த ஜூன் மாதம் (2023) ஈரோடு அருகே நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தவற்றை எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.