மெய்நலம் – கரூர் காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் விடுதி மாணவர்களுக்கு ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நலவாழ்வு திட்டம்

🌿 மகிழ்ச்சியான அறிவிப்பு! 🌿

இளைஞர்களின் ஆரோக்கியமே ஒரு வளமான சமூகத்தின் உறுதியான அடித்தளம் என்று ஆனந்த சைதன்யா அறக்கட்டளை உறுதியாக நம்புகிறது.

அந்த நோக்கத்தை முன்னெடுத்து, ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் முதன்மை நலவாழ்வு முயற்சியான மெய்நலம்( “ப்ராஜெக்ட் அன்னமயம் – Project Annamayam)” திட்டத்தின் கீழ் நமது அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்களின் தொலை நோக்கு சிந்தனையில் உயர்தர தானியங்கள் மற்றும் மூலிகைகள் அடங்கிய ஆரோக்கியம் மற்றும் சத்து நிறைந்த பானம் தற்போது கரூர் காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் விடுதி மாணவர்களுக்கும் வாரம் மூன்று முறை வழங்கப்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

நமது சமூகத்தின் சேவைப் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்படுவது அனைவருக்கும் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.

இடம்:

GPT கல்லூரி விடுதி,
காணியாளம்பட்டி,
கரூர்

நாள்: 1 ஜூலை 2026

வாரம்: மூன்று முறை

🌱 ஆரோக்கியமான இளைஞர்கள் – வளமான சமூகம்!
💚 மெய்நலம் நலவாழ்வு திட்டம் – ஆரோக்கியம் நோக்கிய புதிய பயணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *