Participants Sharing's
ஆசிரியருக்கு வணக்கம்,
பிரணவ நாதமான ஓம்:
ஆ - உ - ம் - நிசப்தம்
என நான்கு நிலைகளாக உள்ளது.
முதலில், வெளிப்படையாக உச்சரித்தும், பிறகு மனதால் மட்டுமே உச்சரித்து அதன் அதிர்வுகளை உணர்ந்தும், பிறகு சூக்கும, பசந்தி நிலைகளை உணர்ந்தும், அதனின் மேலாக அந்த அதிர்வில் திளைத்தலுமாக பிரணவ நாத தியானம் கற்பிக்கப்பட்டது. இவ்வாறாக வெளிப்படையான வாக்கிலிருந்து, வாக்கிற்கும் மூலமான நாதத்தை உணர்வதற்கான வழிமுறையாக பிரணவம் விளக்கப்பட்டது.
முதல் முறையாக இந்த தியானம் செய்யும்போது உதிரி சொற்களால் மனம் நிரம்பியிருந்தது போலத் தெரிந்தாலும். பிறகு பல மணி நேரங்களுக்கு சொல்லே அற்ற ஒரு தூய்மை என்னுள் இருந்தது. எதையும் யோசிக்கத் தேவையில்லை, எதையும் செய்யத் தேவையில்லை அனைத்தும் எவ்வாறு நிகழ வேண்டுமோ அப்படி நிகழ்ந்தது. Personality / identity / இயல்பு என எதுவுமே தேவையில்லை என்பதும் உள்ளும் புறமும் ஒரு பெரிய நிகழ்வாக, தூய்மையால் இயக்கப்பட்டது போல இருந்தது.
அவ்வளவு துலக்கமாக, அவ்வளவு நேரம் நீடித்த அனுபவமாக பிரணவ நாத தியானம் இருந்தது.
அன்றிலிருந்து, எனது தினசரி நேரத்தில் பிரணவ நாத தியானம் இடம்பெறுகிறது.
ஒவ்வொரு மாலை நேரமும் நான் எதிர்நோக்கும் ஒன்றாக பிரணவ நாதம் இருக்கிறது.
அலைகள் அற்ற கடல் போல சில மணி நேரங்கள் அதற்கு பின் வாய்க்கின்றது.
இதைச் செய்த பிறகு, மனம் என்று நாம் பொதுவாக சொல்லும் மொழியால் இயங்கும் கட்டமைப்பும், ஆனாலும் அதை உணரும் விழிப்புணர்வு (Awareness) எவ்வளவு வேறுபட்டவை என்று ஓரிரு தினங்களிலேயே உணரத் தொடங்கினேன். இக்கட்டான சூழலிலும் இருக்கும்போது, என்னையும் மீறி, எந்தவொரு எத்தனமும் இன்றி எனது விழிப்புணர்வின் அமைதியும் ஆனந்தமும் புரியத் தொடங்கியது.
தினசரி பிராணாயாம பயிற்சிகளும், முன்பு உணர்ந்ததாக ஆழத்துடன் இருந்தது ஆச்சரியம்.
நான் வழக்கமாக செய்து பழகிப் போன செயல்களும், புத்தம் புதியதாகத் தோன்றியது. எனது நடத்தையில், நான் வழக்கமாக செய்யும் செயல்களில் இருக்கும் பிணக்குகள், அதை மாற்றிக் கொள்வது எப்படி போன்ற நடைமுறைகள் நான் முயலாமலேயே எனது சிந்தனையில், தினசரி வாழ்வில் தெரிய வந்தது.
உடலும், மனமும் நான் சுமக்க வேண்டிய ஒன்றாக இல்லாமல், சும்மா, வெறுமனே இருப்பதே ஆனந்தமாக, பூரணமாக இருக்கத் துவங்கியது.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா, என்பது சொற்களாக இல்லாமல் ஒவ்வொரு முறையும் அனுபவமாக மாறுவது ஒரு பேரின்பம்.
இந்த பொக்கிஷத்தை கற்பித்த ஆசிரியருக்கு மிக்க நன்றி!
ஸ்ரீராம் சங்கரன்,
ஆஸ்திரியா
Hello sir
Greetings
Pranavamanthra Dhyanam
It was completely a different experience for me on the sivarathri day sitting with yoga mudra and ardha sidhasana with most comfort started chanting om started created vibrations the entire body and focus to the belly button, in continuation to the next stage of keep chanting inside the same for 21 times almost stillness & emptiness in me. During the time of meditation as third stage, guru started a prayer with so low voice triggered me and tears started… It was a wonderful experience during that special occasion which is great blessing for me.
Thank you so much sir for being with me. It means a lot to me.
Hari Govindan,
Coimbatore
