
தில்லை செந்தில் பிரபு அவர்கள் எங்கள் அமைப்பின் சார்பில் தொடர்ந்து நடத்திவரும் தியானம், மனக்குவிப்பு, மனச் சோர்வு நீக்க பயிற்சிகள் மீண்டும் நிகழ உள்ளன.
அடிப்படையில் இவை இந்தியாவின் நீண்ட யோக- தியான மரபிலிருந்து நவீன முறையில் உருவாக்கப்பட்டவை. நூறாண்டுகளாக உலகெங்கும் பல இந்திய நிபுணர்களால் பயிற்றுவிக்கப்பட்டு, நவீன வாழ்க்கையின் தேவைகளுக்கு ஏற்ப தொடர்ந்து செம்மைப்படுத்தப்பட்டு, இன்றைய வடிவத்தை அடைந்திருக்கின்றன.
இன்றைய வாழ்க்கையில் மிகையான மூளை உழைப்பும், பணிச்சூழலின் அழுத்தமும், மனச் சோர்வுக்குக் காரணமாகின்றன. அது பலரிடம் இயல்பான தூக்கம் அமையாத நிலையாக மாறிவிடுகிறது. ஏதோ ஒரு கட்டத்தில் சோர்வுநோய் உருவாகி அது முழுமையான செயலின்மையை நோக்கி கொண்டுசெல்கிறது.
இத்தகைய சிக்கல்களிலிருந்து தன்னைத் தானே மீட்டுக்கொள்வதற்கும், இன்னும் ஒத்திசைவுள்ளதாக நம் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளும் பொருட்டு நம் உள்ளத்தை நாமே கட்டுப்படுத்திக்கொள்வதற்குமான பயிற்சிகளாக இவை மெல்ல உருவாகியுள்ளன.
இன்று மிகையான ஊடகப் பயன்பாடு மற்றும் தொடர்ந்து நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்கும் செய்திப் பெருக்கு காரணமாக எதிலும் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாதவர்களாக நாம் ஆகிறோம். இது நமது கல்வி, தொழில், பொது வாழ்க்கை என அனைத்துத் தளங்களிலும் நமது செயல்பாடுகளைக் குலைத்துவிடுகிறது.
இப்பயிற்சிகள் இத்தகைய சிக்கல்களுக்கான தீர்வுகளாக உலகெங்கும் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. தொடர்ந்து பயிற்றுவிக்கவும் படுகின்றன. இவற்றில் பல்வேறு முறைகள் உள்ளன. தில்லை கற்பிப்பது அதில் ஒன்று.
இவற்றை மதம் சார்ந்த பயிற்சிகள் என்று கூறிவிட முடியாது. மத மரபுகளிலிருந்து அவை நீண்டகாலமாக உருவாகி வந்திருந்தாலும், இன்று நவீனப்படுத்தப்பட்டு அனைவரும் பங்கேற்கக்கூடிய பயிற்சிகளாக மாற்றப்பட்டுள்ளன.
தில்லை செந்தில்பிரபு இந்த தியான- உளக்குவிப்புப் பயிற்சிகளில் 20 ஆண்டுகள் பயிற்றுவித்த அனுபவம் கொண்டவர். ஒரு முழுமையான ஆசிரியராக மாணவர்களுக்கு திகழ்பவர்.
பல நூறு பேர் பயனடைந்துள்ள இப்பயிற்சிகள் மீண்டும் நிகழ உள்ளன. ஆர்வமுடையவர்கள் கலந்துகொள்ளலாம்
நாட்கள் டிசம்பர் 4, 5 மற்றும் 6
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

இது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் வரும் டிசம்பர் 4,5 & 6 (2026) வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழ்த்தவுள்ள தியானம்- உளக்குவிப்பு- உளச்சோர்வு நீக்கம்- வகுப்புகள் பற்றி எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் தனது இணையதளத்தில் 11 நவம்பர் 2026 அன்று தியானம்- உளக்குவிப்பு- உளச்சோர்வு நீக்கம்- வகுப்புகள் என்ற தலைப்பில் வெளியிட்ட இணைய கட்டுரையின் தொகுப்பு.
