தியானம் உளக்குவிப்புப் பயிற்சிகள் பற்றி எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் கட்டுரை

March 26, 2026

தில்லை செந்தில் பிரபு நடத்தும் தியானம் – உளக்குவிப்புப் பயிற்சிகள் இப்போது மிகப்புகழ்பெற்றவை. இன்றைய வாழ்வில் நாம் அடையும் சலிப்பு,அதன் விளைவான உளச்சோர்வு எல்லாவகையிலும் நம்மைச் சூழ்ந்துள்ளது. சட்டென்று செயலின்மை நோக்கி அது நம்மை தள்ளிவிடும்.

செயலின்மை மிகச் சிக்கலான ஓர் உளநிலை. அது உண்மையில் செயலின்மை என்றே நமக்கு தெரிவதில்லை. துளித்துளியாக, தொடர்ச்சியற்று எதையேனும் செய்துகொண்டு முழுநாளையும் கடத்துவோம். பரபரப்பாக ஏதோ செய்வதாகவே நினைத்துக்கொள்வோம். ஆனால் ஆக்கபூர்வமான விளைவை உருவாக்காத எச்செயலும் உளச்சோர்வின் வெளிப்பாடுதான் என நாம் அறிவதில்லை. நம் கவனம் குவியாததனாலேயே அவ்வாறு செய்துகொண்டிருக்கிறோம்.

அதேபோன்று மிகப்பெரியவையும் அசாத்தியமானவையுமான திட்டங்களையும் கனவுகளையும் சொல்லிக்கொண்டிருப்பதும் ஒருவகை செயலின்மையின் வெளிப்பாடுகளேயாகும். அனைத்துச் செயல்கள் மீதும் அவநம்பிக்கையை வளர்த்துக்கொள்வதும், அதை தர்க்கபூர்வமாகச் சொல்லிக்கொண்டிருப்பதும் இன்னொரு வகைச் செயலின்மை. இவை நம் செயலின்மையை நமக்கு நாமே மறைக்க நாம் போடும் உளநாடகங்கள்.

மிகத் தொடக்கநிலையிலேயே இந்த தேக்கநிலையை தொடர்ச்சியான எளிய பயிற்சிகள் வழியாக களைந்துவிட முடியும். அதற்கு முறையான வழிகாட்டுதல்கள் தேவை. ஊக்கம் கொண்ட ஒரு சுற்றமும் இன்றியமையாதது. தில்லை செந்தில் பிரபுவின் பயிற்சிகள் அவ்வகையில் மிக உதவியானவை.

தில்லை செந்தில் பிரபு இந்த தளத்தில் 25 ஆண்டுகள் பயிற்றுநராகப் பணியாற்றிய பின்னணி கொண்டவர். நவீன உளவியலையும், மரபான தியான- யோக முறைகளையும் கலந்த  உளக்குவிப்பு- செயலூக்கப் பயிற்சி அவருடையது.

மீண்டும் இப்பயிற்சிகள் வரும் ஏப்ரல் 17 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் நிகழ்கின்றன.

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

இது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் வரும் ஏப்ரல் 17 18 மற்றும் 19 (2026) வெள்ளி சனி ஞாயிற்று கிழமைகளில் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில்‌ நிகழ்த்தவுள்ள உளக்குவிப்பு- தியானம் பயிற்சிகள் பற்றி எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் தனது இணையதளத்தில் 26 மார்ச் 2026 அன்று தியானம் உளக்குவிப்புப் பயிற்சிகள் என்ற தலைப்பில் வெளியிட்ட இணைய கட்டுரையின் தொகுப்பு.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *