ஆனந்த சைதன்யா அறக்கட்டளை முன்னெடுக்கும் “கற்கை நன்றே” திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, கோவை சத்தி சாலையில் வழியாம்பாளையம் பிரிவில் SNS College of Technology அருகேயுள்ள ஸ்வர்ணா ஹாலில் 25 பிப்ரவரி 2024 அன்று நடைபெற்றது. விழாவில் மாணவ மாணவியர், பெற்றோர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கற்கை நன்றே திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, சிறப்பு பரிசுகள் மற்றும் லேப்டாப் 3 மாணவர்களுக்கு அவர்களது கல்விக்கு தேவை கருதி வழங்கப்பட்டது.
கற்கை நன்றே கல்வி விழாவில் நட்சத்திர ஆசிரியர்-2024 விருது:
கோவை ஷாஜகான் நகரிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஆர். தமிழ்செல்வன் M.Sc., B.Ed., M.Phil.
அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான நட்சத்திர ஆசிரியர்-2024 விருது வழங்கப்பட்டது, மேலும் மேலும் அவரது கல்விச்சேவையை பாராட்டும் விதமாக கல்வி கடவுளான சரஸ்வதி தேவி சிலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மாணவர்களின் தேவை கருதி கற்கை நன்றே கல்வி விழாவில் 3 மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட்டது.
ஆனந்த சைதன்யா அறக்கட்டளை முன்னெடுக்கும் “கற்கை நன்றே” திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, கோவை சத்தி சாலையில் வழியாம்பாளையம் பிரிவில் SNS College of Technology அருகேயுள்ள ஸ்வர்ணா ஹாலில் 25 பிப்ரவரி 2024 அன்று நடைபெற்றது. விழாவில் மாணவ மாணவியர், பெற்றோர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கற்கை நன்றே திட்டத்தில் கல்லூரி பயின்று வரும் மாணவர்களுக்கு லேப்டாப் தேவைப்பட்டதை அறிந்துகொண்டு பெங்களூரை சார்ந்த திரு. ரவிஷங்கர் அவர்கள் மூன்று லேப்டாப்களை நன்கொடையாக வழங்கினார். அந்த மூன்று லேப்டாப்களும் கற்கை நன்றே கல்வி விழாவில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் சார்பில் கீழ்கண்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
ஹரிபிரசாந்த்
அல்ஃபினா
கலையரசி
மூன்று லேப்டாப்களை மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கிய பெங்களூரை சார்ந்த திரு. ரவிஷங்கர் அவர்களுக்கு மாணவர்கள் மற்றும் அறக்கட்டளையின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
விழாவில் சிறப்புரை வழங்கியவர்கள்
திரு. யோகேஸ்வரன் ரிஷாந்தன்
கட்டுமான பொறியாளர், தொழிலதிபர், இந்தோனேஷியா.
திரு. விஜயகுமார் சம்மங்கரை
எழுத்தாளர், தகவல் தொழில் நுட்பத்துறை, கோயம்புத்தூர்.
திரு. செளந்தர்
யோகா ஆசிரியர், சத்யம் மரபார்ந்த யோகா, சென்னை.
திரு. திருநாவுக்கரசு
மேலாண்மை இயக்குனர், சன்டெக் எனர்க்ரீன் இண்டஸ்ட்ரீஸ், ஆரணி.
நிறைவு உரை வழங்கியவர்
திரு. தில்லை செந்தில் பிரபு
நிறுவனர், ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, கோயம்புத்தூர்.
ஆனந்த சைதன்யா அறக்கட்டளை கல்வியில் சிறந்து விளங்கும், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து, அவர்களது உயர்கல்வி கனவை நனவாக்க கற்கை நன்றே திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
மேலும் வையத்தலைமைகொள் எனும் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை ஆனந்த சைதன்யா ட்ரெயினிங் அகடமி மூலம் வழங்கி வருகிறது.
வாசிக்கலாம் வாங்க எனும் திட்டத்தில் புத்தக வாசிப்பு இயக்கம் துவங்கப்பட்டு வாசிப்பு பழக்கத்தை வளர்த்து, மாணவர்களின் அறிவாற்றல் திறனை மேம்படுத்தி வருகிறது.
ஆனந்த சைதன்யா யோகா மற்றும் தியான வுகுப்புகள் மூலம் மனிதர்களின் அகவாழ்வில் ஆனந்தமும் புறவாழ்வில் வளமும் பெற உதவும் யோகா, தியானம் மற்றும் உளக்குவிதல் பயிற்சிகளை ஆனந்த சைதன்யா அறக்கட்டளை வழங்கி வருகிறது.