ஆனந்த சைதன்யா அறக்கட்டளை முன்னெடுக்கும் “கற்கை நன்றே” திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, கோவை சத்தி சாலையில் வழியாம்பாளையம் பிரிவில் SNS College of Technology அருகேயுள்ள ஸ்வர்ணா ஹாலில் 25 பிப்ரவரி 2024 அன்று நடைபெற்றது. விழாவில் மாணவ மாணவியர், பெற்றோர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கற்கை நன்றே திட்டத்தில் கல்லூரி பயின்று வரும் மாணவர்களுக்கு லேப்டாப் தேவைப்பட்டதை அறிந்துகொண்டு பெங்களூரை சார்ந்த திரு. ரவிஷங்கர் அவர்கள் மூன்று லேப்டாப்களை நன்கொடையாக வழங்கினார். அந்த மூன்று லேப்டாப்களும் கற்கை நன்றே கல்வி விழாவில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் சார்பில் கீழ்கண்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
அல்ஃபினா
கலையரசி
ஹரிபிரசாந்த்
மூன்று லேப்டாப்களை மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கிய திரு. ரவிஷங்கர், திரு. தினகர், திரு. பாலாஜி மற்றும் திரு. ஷ்யாம் அவர்களுக்கும் இதை ஒருங்கிணைத்து பெற்றுதந்த திருமதி. ராதிகா அவர்களுக்கும் மாணவர்கள் மற்றும் அறக்கட்டளையின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.