தியானம், கடிதம் – சிசுபாலன்

தியானம், கடிதம் – சிசுபாலன்

Sharings by Sisubalan:

அன்புள்ள ஜெயமோகன் ,

வணக்கம். ஆனந்த சைதன்ய தியான பயிற்சி பயில எங்களுக்கு வாய்ப்பு அளித்தமைக்கும், உண்மையான தேடல் உள்ள மாணவர்களுக்கு சரியான வழிகாட்டியாக நீங்கள் இருப்பதற்கும் உங்களுடன் இணைந்து இந்த வகுப்பை ஒருங்கமைத்த அனைவருக்கும் ஹரி,  அந்தியூர் மணி அண்ணா அவர்களின் அர்ப்பணிப்புக்கும்   உளம் கனிந்த நன்றிகள்,  ஆசிரியர் தில்லை அவர்களுக்கும் குருமார்கள்  அனைவருக்கும் பாதம் பணிந்து வணங்கி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் முறை கடிதம் எழுதுவதால், சிறிய பதற்றம் உள்ளது. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

குரு தில்லை அவர்கள் மிகுந்த அன்பானவர், மாணவர்களின் தேவையை நிறைவு செய்ய சிறப்பாக பயிற்சியை தொகுத்து வழங்கினார்கள்,  ஆசிரியரின்  சிரிப்பு மிக அழகாக இருந்தது. அவருக்கே உரிய எளிய ஆத்மார்த்தமான உரையாடல் மூலம் வகுப்பை தொடங்கினர், உடல், மனம், பிராணன் பற்றிய தெளிவான விளக்கங்கள்  வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் வழியாக எளிய முறையில் கதைகள் மூலம் தொகுத்து வழங்கினார்கள்.

எல்லையற்ற பொறுப்பும், இக்கணத்தில்  முழுமையாக ஏற்க்கும் தன்மையுடன்  இருப்பது பற்றிய தெளிவான விளக்கங்கள், பிரக்ஞயுடன் பிரபஞ்சத்தில் எல்லையில்லா ஆற்றலை அறிந்து கொள்ள தேவையான கருவிகள் மூலம் பல அழகான உணர்வுகளை இதற்கு முன் அறியாத  மகிழ்வான தருணங்களை உணர அவரின் சைதன்ய  தியான பயிற்சி குரு ஆசியுடன் வழங்கினார்கள். 

அந்த நெகிழ்வான அகம் மலர்ந்த தருணம், அனுபவித்த நிகழ்வை வெளிபடுத்த தேவையான வார்த்தைகளும், என்னுள் இல்லை , குருமார்களுக்கும்  ஆசிரியர் தில்லை அவர்களுக்கும், வழிகாட்டிய உங்களுக்கும் பாதம் போற்றி வணங்குகிறேன். நன்றிகள் பல.

குரு தில்லை அவர்கள் மிகுந்த அன்பானவர், மாணவர்களின் தேவையை நிறைவு செய்ய சிறப்பாக பயிற்சியை தொகுத்து வழங்கினார்கள்,  ஆசிரியரின்  சிரிப்பு மிக அழகாக இருந்தது. அவருக்கே உரிய எளிய ஆத்மார்த்தமான உரையாடல் மூலம் வகுப்பை தொடங்கினர், உடல், மனம், பிராணன் பற்றிய தெளிவான விளக்கங்கள்  வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் வழியாக எளிய முறையில் கதைகள் மூலம் தொகுத்து வழங்கினார்கள், எல்லையற்ற பொறுப்பும், இக்கணத்தில்  முழுமையாக ஏற்க்கும் தன்மையுடன்  இருப்பது பற்றிய தெளிவான விளக்கங்கள், பிரக்ஞயுடன் பிரபஞ்சத்தில் எல்லையில்லா ஆற்றலை அறிந்து கொள்ள தேவையான கருவிகள் மூலம் பல அழகான உணர்வுகளை இதற்கு முன் அறியாத  மகிழ்வான தருணங்களை உணர அவரின் சைதன்ய  தியான பயிற்சி குரு ஆசியுடன் வழங்கினார்கள்.  அந்த நெகிழ்வான அகம் மலர்ந்த தருணம், அனுபவித்த நிகழ்வை வெளிபடுத்த தேவையான வார்த்தைகளும், என்னுள் இல்லை , குருமார்களுக்கும்  ஆசிரியர் தில்லை அவர்களுக்கும், வழிகாட்டிய உங்களுக்கும் பாதம் போற்றி வணங்குகிறேன். நன்றிகள் பல

கர்ம யோகம் பற்றிய அவரின் சிறிய எளிமையான விளக்கம் அருமையாக இருந்தது. நிலை செயல் அதன் பொருட்டு  பெறும் பொருள் என அருமையாக எடுத்துக்காட்டுடன் கூறினார். நீங்கள் முன்னிறுத்தும் ஆளுமைகள் அனைவரும் வியக்கத்தக்க பெருச்செயல் ஆட்ருபவர்கள் அவர்களிடம் உடன் இருப்பதை பெரும் பேறாக உணர்கிறேன். உங்களுடன் சேர்ந்து செயலாற்றும் வாய்ப்பு அளிக்க வேண்டும் ஜெ .

உங்கள் அன்புள்ள மாணவன்

சிசுபாலன்

(பிப்ரவரி மாதம் (2023) ஈரோடு அருகே நடைபெற்ற தியான வகுப்பில் பங்கேற்றவர்)


Responsed by: Writer Jeyamohan:

அன்புள்ள சிசுபாலன்

தியானமுகாம் சிறப்பாக நிகழ்ந்தது என்று பங்குகொண்டவர்கள் அழைத்துச் சொன்னார்கள். அவர்களில் சிலர் பல ஆண்டுகளாக வெவ்வேறு தியான முகாம்களில் கலந்துகொண்டவர்கள். அவர்களுக்கு இது மிகப்புதிய அனுபவமாக இருந்தது. இதிலிருந்த தனிப்பட்ட கவனிப்பும், நேரடியாக ஓர் ஆசிரியருடன் தங்கி பயிலும் அனுபவமும் எவ்வளவு முக்கியம் என உணர்ந்ததாகச் சொன்னார்கள். இதுதான் பல நூற்றாண்டுகளாக இங்கே நிகழ்ந்து வந்த செயல்பாடு. அகப்பயிற்சிகள் எல்லாமே ஆர்வமும் கொஞ்சம் அர்ப்பணிப்பும் உடைய சிலருக்காகவே நடத்தப்பட வேண்டும். அதன்பொருட்டு கொஞ்சம் நேரம் ஒதுக்கிப் பயிலமுடியாதவர்களால் அதற்குள் செல்லமுடியாது. அத்தகையோர் பங்குபெறும்போது மற்றவர்களாலும் சரியான முறையில் கற்கமுடியாது. இதுதான் பெருந்திரள் பயிற்சிகளின் குறைபாடு. ஆகவே இதை ஏற்பாடு செய்கிறோம். என்னைப் பொறுத்தவரை சரியானவர்களைச் சுட்டிக்காட்டுவது மட்டுமே என் பணி. இந்த வகுப்பு தொடர்ந்து நிகழுமென நம்புகிறேன்.

எழுத்தாளர் திரு. ஜெயமோகன்


https://www.jeyamohan.in/181189/ இது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் (2023) ஈரோடு அருகே நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்ததும் அதற்கு எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் பதிலும் அடங்கிய இணைய கட்டுரையின் தொகுப்பு.

தியானம், திரளும் தனிமையும் – குமார் சண்முகம்

தியானம், திரளும் தனிமையும்  – குமார் சண்முகம்

Sharings by Kumar Shanmugam:

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

இப்போதுதான் தியான முகாமில் கலந்து கொண்டு கோவை போய்க்கொண்டு இருக்கிறேன்.அவ்வளவு புத்துணர்ச்சியாகவும் அகவலு கூடியும் இருக்கின்றது. தில்லை செந்தில் அண்ணா அவர்களின் வகுப்பு 2010 போல நான் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த மூன்று நாள் வகுப்பு வேறொரு தன்மையில் வேறொரு பரிணாமத்தில் அனைவருக்கும் பயன்படும்படியாக அன்றாட வாழ்க்கையில் அவர் சொல்லிக் கொடுத்த விஷயங்களை உபயோகப்படுத்தி பார்க்கும் படியாக மிக்க உறுதுணையாக இருக்கும் என்று தோன்றுகிறது. மிகக்குறைந்த  நபர்களே இருந்ததால் அவரோடு உரையாட அவர் நாங்கள் செய்யும் பயிற்சிகளை எளிதாக சரிபார்த்து சொல்ல ஏதுவாக இருந்தது.

இரண்டாம் நாள் எதிர்பாராமல் மழை பெய்தது ஒரு நல் ஆசீர்வாதமாக தோன்றியது.உணவு உபசரிப்பு மற்றும் தங்குமிட ஏற்பாடு மணி அண்ணா மற்றும் சமையல் கலைஞர்கள் பொம்மன் மிகச் சிறப்பாக இருந்தது.

பல்வேறு கூட்டு தியானங்கள், மூச்சுப் பயிற்சிகள், ஆசனங்கள்,கேள்வி பதில்கள் என வகுப்பு மிகச் சிறப்பாக திட்டமிட பட்டிருந்தது.இது போன்ற விஷயங்களை ஒருங்கிணைத்த உங்களுக்கும்அதற்கு சூழல் அமைத்துக் கொடுத்த உங்கள் எண்ணத்திற்கும்மிகுந்த நன்றி கடன் பட்டவனாக இருக்கின்றோம்.

அன்பும் நன்றியும்

குமார் சண்முகம்

(பிப்ரவரி மாதம் (2023) ஈரோடு அருகே நடைபெற்ற தியான வகுப்பில் பங்கேற்றவர்)


Responsed by: Writer Jeyamohan

அன்புள்ள குமார்,

தில்லை செந்தில்பிரபு அவர்கள் தொழில்துறையில் மிகப்பெரிய பதவியில் இருந்து அதைத் துறந்து மிகப்பெரிய அமைப்பொன்றில் முழுநேர உறுப்பினராக ஆனார். பல ஆண்டுகள் புகழ்பெற்ற தியானப் பயிற்றுநராக இருந்தார். பலநூறுபேர், ஆயிரம்பேர் கலந்துகொள்ளும் முகாம்களை நடத்தியிருக்கிறார். அந்தப் பெருந்திரள் தியான முறையின் குறைபாட்டைக் கண்டு ஒதுங்கிக்கொண்டார். மீண்டும் தொழில்துறையில் இறங்கி பணியாற்றுகிறார். கூடவே கல்விப்பணி, தியானப்பயிற்றுமுறைகள் ஆகியவற்றைச் செய்து வருகிறார். எனக்கு நன்றாகவே தெரிந்தவர்.

தியான – யோகப் பயிற்சிகளில் பெருந்திரள் நிகழ்வுகளுக்கு ஒரு நடைமுறைப்பயன் உண்டு. பெருந்திரளுடன் இருப்பது ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. உற்சாகமான மனநிலை அமைகிறது. விழாமனநிலை அது. அது தேவை. ஆனால் உண்மையான பயிற்சி சிறிய அளவிலேயே நிகழமுடியும். ஆசிரியரை மாணவர் அறிவது முக்கியமல்ல, அறியவும் முடியாது, அறிந்ததுமே அவரும் ஆசிரியர் ஆகிவிடுவார். ஆனால் ஆசிரியர் மாணவரை தனிப்பட்ட முறையில் அணுக்கமாக அறிந்து வழிகாட்டவேண்டும். ஒவ்வொரு படிநிலையிலும் உடனிருக்கவேண்டும்

இந்த பயிற்சிகள் வழியாக உத்தேசிப்பது அதுவே. நான் எல்லாவற்றிலும் பொதுவாக இருப்பவற்றுக்கு எதிராக ஒரு மாற்று சொல்கிறேன்.  அதற்கு ஒரு வழியும் அமையட்டுமே, சிலருக்காவது பயன்படும் என்பதே நோக்கம்.

அன்பும் நன்றியும்

எழுத்தாளர் திரு. ஜெயமோகன்


https://www.jeyamohan.in/181157/ இது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் (2023) ஈரோடு அருகே நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்ததும் அதற்கு எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் பதிலும் அடங்கிய இணைய கட்டுரையின் தொகுப்பு.