Letters

புத்தக வாசிப்பு போட்டி நடத்தியமைக்கு இதயம் கனிந்த நன்றி – கடிதம், செல்வகுமார்- கரூர்

அன்பு ஆசிரியர் அவர்களுக்கு…..
நமது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் "வாசிக்கலாம் வாங்க " புத்தக வாசிப்பு போட்டி நமது கல்லூரி மாணவர்களுக்கிடையே பிப்ரவரி 24 & 25 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்று முடிந்தது.

வாசிப்பு போட்டியில் சுமார் 32 மாணவர்கள் பங்கு பெற்றனர்……ஒவ்வொரு துறையிலிருந்தும் ஒரு ஆசிரியர் வீதம் மொத்தம் ஐந்து நடுவர்கள் மதிப்பீடுகளை செய்தனர். மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் புத்தகங்களை தேர்வு செய்து, அதனைப் படித்து மிகச் சிறப்பாய் தங்களது வாசிப்பு திறமையினை வெளிப்படுத்தினர்.

மாணவர்களின் உடல் மொழி , சிந்தனை திறன் ,நகைச்சுவை உணர்வு மற்றும் உட்கருத்தை வெளிப்படுத்திய விதம் ஆகியவை ஆசிரியர்களாகிய எங்களுக்கு மிகப்பெரும் வியப்பினை அளித்தது…… ஒவ்வொரு மாணவரும் குறைந்தது பத்து நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 20 நிமிடங்கள் வரை தங்களது வாசிப்பை வெளிப்படுத்தினர்….. முதல் வாசிப்பு போட்டியில் தயக்கத்தோடு பங்கேற்ற பல மாணவர்கள் இந்த போட்டியில் மிக தைரியத்தோடு பங்கேற்றனர்…… இதனை ஆகச்சிறந்த முன்னேற்றமாக எங்களால் பார்க்க முடிந்தது…. அதுபோல் புதிய மாணவர்களும் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி இருந்தனர் ……..

இந்த வாசிப்பு போட்டியில் எங்கள் மாணவர்களிடமிருந்து எண்ணற்ற படிப்பினைகளை நாங்களும் எடுத்துக் கொண்டோம்…… முதல் வாசிப்பு போட்டிக்கு பிறகு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நூலகத்தில் புத்தகங்களை எடுத்துள்ளனர் …… அதுபோல் எண்ணற்ற ஆசிரியர்களும் 150 க்கு மேற்பட்ட புத்தகங்களை எடுத்து வாசித்து வருகின்றனர்….. இந்த வாசிப்பு போட்டியில் பங்கேற்ற பல மாணவர்களின் குணநலன்கள் மேம்பட்டு உள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது….. மேலும் அவர்களின் தொழிற்கல்வி மேம்பாட்டிற்கும் இந்த வாசிப்பு பழக்கம் உறுதுணையாய் உள்ளதை உணர முடிகிறது…..

இந்த வாசிப்பு போட்டியில் பங்கேற்ற பல மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு தீவிர விருப்பம் கொண்டுள்ளனர் …… இத்தனை மாற்றங்களும் நமது அறக்கட்டளையின் புத்தக வாசிப்பு இயக்கத்தின் வாயிலாக சாத்தியம் ஆயிற்று….. இத்தனை மாற்றங்களை பார்க்கும் பொழுது தாங்கள் கூறிய ,"சூழ்நிலைகள் அமைந்தால் செயல்கள் தானாக நடக்கும் " என்பதுதான் ஞாபகம் வருகிறது…. எப்பொழுதும் எங்களை சரியாக வழி நடத்தும் எங்கள் ஆசிரியருக்கு எங்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் சார்பாக எங்கள் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்….. மேலும் உடனிருந்து ஊக்கப்படுத்தும் நமது அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்……


திரு. செல்வகுமார், விரிவுரையாளர், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கரூர்

ஆனந்த சைதன்யா அறக்கட்டளை கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியுடன் இணைந்து கல்லூரி மாணவர்களிடையே புத்தக வாசிப்பு போட்டி பிப்ரவரி 24 & 25 அன்று நடத்தப்பட்டது.

கல்லூரியில் நடத்தப்பட்ட வாசிப்பு போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டது குறித்து கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர் திரு. செல்வகுமார் அவர்கள் கல்லூரியின் சார்பாக மகிழ்ச்சி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். இது அந்த கடிதத்தின் தொகுப்பு.

மேலும் விழா குறித்த தகவல்களுக்கு: கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புத்தக வாசிப்பு போட்டி பரிசளிப்பு விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *