இரண்டாம்நிலை யோகம் – கடிதம், அருண் ஆனந்த், சென்னை

அன்பிற்குரிய ஜெ அவர்களுக்கு,

இரண்டாம் நிலை யோக பயிற்சி கடந்த வாரம் கலந்துகொண்டேன். முதல் நிலை பயிற்சிகளை விட்டு விட்டு செய்து கொண்டிருந்தேன். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். அதனுடன் இந்த புதிய பயிற்சிகளை செய்து வருவது மிகுந்த அமைதியையும் உளக்குவிப்பையும் கொடுக்கிறது. 

சைதன்ய சுவரூப தியானம் இந்த அளவிற்கு சிறப்பாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த ஐந்து நாட்களாக வேலையிலும் வாசிப்பிலும் வெகு நாட்களாக செய்யாமல் இருந்த பல வேலைகள் நேர்த்தியாகவும் முழு ஈடுபாட்டுடனும் செய்து வருகிறேன். தன்னம்பிக்கை அதிகம் ஆனதை போல் உணர்கிறேன், முழு மனதுடன் செய்யும் செயலில் தன்னம்பிக்கை நிச்சயம் கூடும் என தெரிகிறது. வாழ்க்கை இனிமையாக ஆனதை போல் உணர்கிறேன்.

உங்களுக்கும் குரு தில்லை செந்தில் பிரபு அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

இப்படிக்கு,

அருண் ஆனந்த்

அன்புள்ள அருண்,

யோகம் தியானம் போன்றவற்றின் சிக்கல் என்னவென்றால் அவற்றை தொடர்ச்சியாகச் செய்பவர்கள் அடையும் பயன்களை அவற்றை செய்யாதவர்களுக்கு புரியவைக்கவே முடியாது என்பதுதான். அவர்களுக்கு அவை மிகையாக, விருப்பக்கற்பனையாகவே தோன்றும். மனமும் உடலும் ஒன்றே என உணர்ந்தவர்களுக்கு அதன் தர்க்கம் புரியும்.

ஜெ


இது கடந்த ஜூன் (2025) மாதம் 6,7 & 8 ஆகிய தேதிகளில் ஈரோடு அருகே உள்ள மலைதங்குமிடத்தில் யோகா ஆசிரியர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய மூன்று நாள் உளக்குவிப்பு – தியானபயிற்சி முகாமில் கலந்துகொண்ட திரு. அருண் ஆனந்த் அவர்கள் பயிற்சி முகாமில் கற்றுக்கொண்டதன் மூலமாக தான் உணர்ந்த தியான அனுபவங்களை இந்த தியான முகாமை ஏற்பாடு செய்த எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தொகுப்பு.

இந்த கடிதம் கடந்த 27 ஜூன் 2025 அன்று எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் இரண்டாம்நிலை யோகம், கடிதம் எனும் தலைப்பில் வெளியாகி இருந்தது.

எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *