தியானம் என் தாத்தாவால் அறிமுகமானது .சிறுவயதில் சில வகுப்புகளுக்கும் சென்றிருக்கிறேன் ராமகிருஷ்ணா பள்ளியில் பயின்றதால் தியானம் பற்றிய விழிப்புணர்வு சற்று கூடுதலாக கிடைத்தது. கல்லுரி நாட்களில் போதைக்கு அடிமையானதால் வீட்டில் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார்கள் .அங்கு புத்தரை படிதேன் .சில தியான முறைகளையும் படித்து பயின்றேன் .பிறருக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. எனக்கு தெரிந்த மாதிரி பயிற்சியும் அளித்தேன் அதில் சிலர் பயன் அடைந்ததாகவும் சொலிருக்கிறார்கள். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
2023 அக்டோபர் 27 ,28, 29 ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நடைபெற்ற குரு தில்லை செந்தில் பிரபு நடத்திய தியானம் மற்றும் உளக்குவிப்புப் பயிற்சி முகாம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மலை காடு பெரிய அமைதியை தந்தது. மூன்று நாட்கள் கைபேசி பயன்படுத்தவில்லை. மூலிகை வாசம், ஓயாத பறவைகள் சத்தம், அழகிய பல பட்டாம்பூச்சிகள், பெரிய பெரிய காட்டு மரங்கள், குளிர் காற்று, நல்ல தங்கும் இடம், சாப்பாடு ,தண்ணிர், தேனீர் ,நண்பர்கள்…
ஆசிரியர் தில்லை செந்தில் பிரபு சொன்ன தியானம் பற்றிய நல்ல கதைகள், பல அறிவியல் உண்மைகள்,தியான முறைகள் மற்றும் பயன்கள் என அனைத்தையும் மிக எளிமையாக கற்றுத்தந்தார். நான் என் அண்ணன் மகனுடன் வந்திருதேன் .எங்கள் இருவர்க்கும் மறக்கமுடியாத ஓர் நல்ல அனுபவமாக இருந்தது. இயற்கையில் திளைக்க தியான விழிப்புணர்வு பெற இப்படி ஓர் அருமையான அனுபவம் ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றி.
மலர்வண்ணன்
எழுத்தாளர் திரு. ஜெயமோகன்
https://www.jeyamohan.in/192918/ இது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் (2023) ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தவற்றை எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் கடந்த நவம்பர் 18, 2023 அன்று வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.