கோவை : 4 ஏப்ரல் 2024
கோவை குரும்பபாளையத்திலிருந்து செயல்படும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி மாணவர்களிடையே “வாசிக்கலாம் வாங்க” என்ற இயக்கத்தை நடத்தி வருகிறது.
கடந்த மார்ச் (2024) மாதம் வீரியம்பாளைம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட தொடர் புத்தக வாசிப்பு போட்டிகளில், 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதில், சிறப்பாக செயல்பட்ட 25 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வீரியம்பாளைம் மாநகராட்சி நடு நிலைப்பள்ளியில் பள்ளியில் ஏப்ரல் 4 (2024) அன்று காலை நடைபெற்றது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. உமா மகேஸ்வரி, ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு மற்றும் தன்னார்வலர்கள் சண்முகசுந்தரம், ராஜமுருகன், அன்பரசன், பிரதீப், தினேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ்கள் மற்றும் புத்தகப்பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் பேசும்போது “புத்தக வாசிப்பு என்பது அறிதலில் தொடங்கிஅதை அனுபவ ஞானமாக ஆக்கும் செயலின் முதல்படி. இது அறியாமை என்கின்ற தாமஸ இருளை நீக்கி உள்ளொளியை வளரச்செய்வதால் ஒரு நிறைவான வாழ்வு மனிதனுக்கு கிடைக்கும். எனவே சிறு வயதில் இருந்தே வாசிப்பை பழக்கமாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில் தலைமை ஆசிரியர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.