கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் மின்னியல் துறையின்ஆய்வு மாநாடு
கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை சார்பாக ஒரு நாள் “எலக்ட்ரிகல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் தேசிய மாநாடு 2023” ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மாநிலத்தின் பல கல்லூரிகளிலும் இருந்து கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் தலைமை விருந்தினர்களாக மேக் கண்ட்ரோல்ஸ் நிறுவனத்தின் வைஸ் பிரசிடெண்ட் மற்றும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு மற்றும் GCT முன்னாள் முதல்வரும் PSG குழும ஆலோசகரான டாக்டர் லக்ஷ்மி பிரபா கலந்து கொண்டார்கள்.
கல்லூரியின் பிரின்சிபால் டாக்டர் மனோன்மணி அவர்கள் தனது உரையில் தொழில்துறை ஆய்வுகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆர்வத்தைத் தூண்டினார்.
டாக்டர் லக்ஷ்மி பிரபா தொடக்க உரையை நிகழ்த்தி, டிஜிட்டல் உலகில் IOT மற்றும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி பற்றி குறிப்பிட்டார்.
ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு பேசும் போது மின்னியல் மற்றும் மின்னணுவியல் சார்ந்த கல்வியானது விமானம் மற்றும் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் விதம் மற்றும் தொழில் வாய்ப்புகள் பற்றி விளக்கினார். மேலும் மாணவர்களின் அறிவுத்திறனையும் செயலாற்றலையும் மேம்படுத்த தினசரி யோகா தியான பயிற்சிகள் உதவும் என்று குறிப்பிட்டார்.
தேசிய மாநாட்டில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களால் 65 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
துறைத் தலைவர் டாக்டர் வி.கோபாலகிருஷ்ணன், டாக்டர் எஸ்.சித்ரா ஆகியோர் நிகழ்வினை ஏற்பாடு செய்தனர்.