24 டிசம்பர் 2025 , கரூர்
வாசிக்கலாம் வாங்க – புத்தக வாசிப்பு இயக்கம் பரிசளிப்பு விழா!!
கோவை ஆனந்த சைதன்யா அறக்கட்டளை மற்றும் கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து கல்லூரி மாணவர்களிடைய புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக கடந்த ஆகஸ்ட் 26 அன்று கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாசிப்பு போட்டிகளை நடத்தியது. இதில்15க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா கடந்த 24 டிசம்பர் 2025 அன்று கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் கலந்துகொண்டார். மேலும் கல்லூரி முதல்வர், மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 150 மேற்பட்டவர்கள் புத்தக வாசிப்பு போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

கல்லூரியின் முதலாமாண்டு துறைத்தலைவர் திருமதி. அமுதா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரியின் விரிவுரையாளர்களான முனைவர். திருமதி M.உமாதேவி, முனைவர் திருமதி. A.கவிதா, முனைவர் திருமதி.E.மேனகா மற்றும் திரு.ராமராசன் ஆகியோர் வாசிப்பு போட்டியின் நடுவர்களாக கலந்துகொண்டனர்.
கல்லூரியின் முதல்வர் திரு.லோகநாதன் விழாவில் தலைமைதாங்கி உரையாற்றினார்

தொடர்ந்து ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அப்போது சுயமாக சிந்திக்கும் திறன், புதுமையான கற்பனைகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிற்கு புத்தக வாசிப்பு பழக்கம் வழிகாட்டியாக அமைகிறது எனக்கூறினார், டிப்ளமோ சார்ந்த படிப்பிற்கான வேலை வாய்ப்புகள் பற்றி மாணவர்களிடையே உரையாற்றினார். மேலும் மாணவர்களுக்கு உளக்குவிதலின் அவசியத்தையும் பற்றியும் உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து புத்த வாசிப்பு போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் பரிசுகளாக சான்றிதழ்கள், ரொக்கப்பணம் மற்றும் புத்தகங்களை வழங்கினார்.

முதல் பரிசு: கேசவன்
ரூபாய் 5000 ரொக்கப்பணம், சான்றிதழ், புத்தகம் ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன.
இரண்டாம் பரிசு: தாஃபியா
ரூபாய் 3000 ரொக்கப்பணம், சான்றிதழ், புத்தகம் ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன.
மூன்றாம் பரிசு: தமிழ்செல்வன்
ரூபாய் 2000 ரொக்கப்பணம், சான்றிதழ், புத்தகம் ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன.
மேலும் போட்டியில் கலந்துகொண்ட 12 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக 500 ரூபாய் ரொக்கப்பணமும் சான்றிதழ்களும் புத்தகங்களும் வழங்கப்பட்டன.

















































