உளக்குவிப்பு- தியானம் பயிற்சிகள்

இந்தக் காலகட்டத்தின் முதன்மையான சிக்கல்களான கவனக்குவிப்பின்மை, துயில்நீக்கம் ஆகியவற்றுக்கு வாழ்க்கைமுறை சார்ந்த தீர்வென யோகமும் தியானமும் உலகமெங்கும் முன்வைக்கப்படுகின்றன. தத்துவம், கலை ஆகியவற்றுக்கான அறிமுக வகுப்புகள் நடத்தத் தொடங்கியபோது கூடவே கவனக்குவிப்புக்கான வகுப்புகளின் தேவையை உணர்ந்தோம். இயல்பாக தொடங்கப்பட்ட அவ்வகுப்புகள் பலநூறு பேருக்குப் பயனுள்ளவையாக ஆகி இன்று முதன்மைநிகழ்வாக ஆகிவிட்டிருக்கின்றன.
யோகம் -தியானம் ஆகியவை உரிய ஆசிரியரின் வழிகாட்டலுடன் செய்யப்படவேண்டியவை. அவை எளிய பயிற்சிகள் அல்ல. அந்த ஆசிரியர் தொழில்நுட்பப் பயிற்சியாளரும் அல்ல. முழுமையான வாழ்க்கைவழிகாட்டியென்றும் அவர் அமையவேண்டும். அத்தகைய தகுதிகொண்டவர்களால் இவ்வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தில்லை செந்தில் பிரபு நடத்தும் யோக- தியான வகுப்புகள் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக நிகழ்ந்து வருகின்றன. அடுத்த வகுப்பு பிப்ரவரி 28 மார்ச் 1 மற்றும்2 ( வெள்ளி சனி ஞாயிறு) கிழமைகளில் நிகழும். புதியதாகக் கற்கவிரும்புபவர்களும், ஏற்கனவே இவ்வகுப்பில் கலந்துகொண்டு அப்யிற்சியை தொடரவிரும்புபவர்களும் கலந்துகொள்ளலாம். இப்போதே பதிவுசெய்யலாம்.
தொடர்புக்கு

எழுத்தாளர் திரு. ஜெயமோகன்
இது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் பிப்ரவரி 28 மார்ச் 1 மற்றும் 2 (2025) வெள்ளி சனி ஞாயிற்று கிழமைகளில் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழ்த்தவுள்ள உளக்குவிப்பு- தியானம் பயிற்சிகள் பற்றி எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் தனது இணையதளத்தில் 29 ஜனவரி 2025 அன்று உளக்குவிப்பு- தியானம் பயிற்சிகள் என்ற தலைப்பில் வெளியிட்ட இணைய கட்டுரையின் தொகுப்பு.