ஆனந்த சைதன்யா தியான மையத்தை எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார்.

20.12.2024 கோவை:

கோவை குரும்பபாளையத்தில், ஆனந்த சைதன்யா தியான மையம் துவக்க விழா 20.12.2024 அன்று நடைபெற்றது.

விழாவில் எழுத்தாளர் திரு.ஜெயமோகன், ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு, எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா, ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் தன்னார்வலர்கள், தியான அன்பர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை வரவேற்று உரையாற்றினார். தொடர்ந்து எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் குத்து விளக்கேற்றி ஆனந்த சைதன்யா தியான மையத்தை துவக்கி வைத்து, பேசியதாவது:

இப்போது நவீன காலத்தில், ஒரே தலைப்பை நான்கு நாட்களுக்கு திரும்ப திரும்ப கதைத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த கால அளவு நீண்ட தொடராக இருப்பதை, இப்போதைய சமூக வலைதளங்கள் துண்டு, துண்டாக, சல்லி சல்லியாக நெருக்கி தருகின்றனர்.

20 நிமிடம் பார்க்க முடியாத ஒரு தொடரை, ரீல்ஸ்களாக மாற்றி விட்டனர். இவை, 1 நிமிடம், 2 நிமிடம் நேரம் குறைந்து, இப்போது 30 செகண்டுகளாக மாற்றி விட்டனர்.

YouTube player
YouTube player

யு டியூபில் 1 மணி நேரத்திற்கு பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. உலகம் முழுவதும் இந்த நேரம் குறைந்துள்ளது. நம் உள்ளத்தையும், காலத்தையும் துண்டு துண்டுகளாக நொறுக்கி வைத்துள்ளது. இதுதான் இந்த நுாற்றாண்டின் மிகப்பெரிய பிரச்னை.

ஒட்டுமொத்தமாக எதையும் நினைவில் வைத்திருக்க முடிவதில்லை. 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கே, இப்போது கவனிப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது. ஞானத்தை தேடுபவர்களுக்கு மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையை கடந்து செல்வதற்கும், தியானம் அவசியம்.

இந்த காலகட்டத்தில் ஆன்ம விடுதலைக்கு மட்டுமின்றி, அன்றாட வாழ்வில் கற்றல், தொழில் மற்றும் பிற நிகழ்வுகளில்கவனம் செயல்படுவதற்கும் யோகம் மற்றும் தியானப்பயிற்சிகள் மிக முக்கிய தேவையாகிவிட்டன.

இவ்வாறு, ஜெயமோகன் பேசினார்.

தொடர்ந்து எழுத்தாளர் மரபின் மைந்தன் திரு. முத்தையா அவர்களும் சிறப்புரையாற்றினார்

விழாவில் அடுத்த நிகழ்வாக திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரக்யா திறன் மேம்பாட்டு கூடத்தை திரு. ஜெயமோகன் அவர்களும், சங்கல்பா திறன் மேம்பாட்டு கூடத்தை எழுத்தாளர் மரபின் மைந்தன் திரு. முத்தையா அவர்களும், தேஜஸ் திறன் மேம்பாட்டு கூடத்தை திரு.நாவுக்கரசு அவர்களும் திறந்து வைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *