கற்கை நன்றே – கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா
ஆனந்த சைதன்யா அறக்கட்டளை முன்னெடுக்கும் “கற்கை நன்றே” திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, கோவை சத்தி சாலையில் வழியாம்பாளையம் பிரிவில் SNS College of Technology அருகேயுள்ள ஸ்வர்ணா ஹாலில் 13 ஆகஸ்ட் 2023 அன்று நடைபெற்றது. விழாவில் மாணவ மாணவியர், பெற்றோர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.