Karkai Nandre educational scholarship event on 11 August 2024 – கற்கை நன்றே – கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா

ஆனந்த சைதன்யா அறக்கட்டளை முன்னெடுக்கும் “கற்கை நன்றே” திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, கோவை சத்தி சாலையில் வழியாம்பாளையம் பிரிவில் SNS College of Technology அருகேயுள்ள ஸ்வர்ணா ஹாலில் 11 ஆகஸ்ட் 2024 அன்று நடைபெற்றது. விழாவில் மாணவ மாணவியர், பெற்றோர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கற்கை நன்றே திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, சிறப்பு பரிசுகள் மற்றும் லேப்டாப் 1 மாணவருக்கு அவர்களது கல்விக்கு தேவை கருதி வழங்கப்பட்டது. கற்கை நன்றே கல்வி ஊக்கத்தொகையின் மூலம் பல மாணவர்கள் கலை, அறிவியல், தகவல் தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவம் உட்பட பல துறைகளில் பல கல்லூரிகளில் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.

விழா சிறப்பு விருந்தினர்கள்

முனைவர் திரு. நாகராஜன் N
எழுத்தாளர்,
முதல்வர் (ஓய்வு), CIET கல்லூரி

திரு. நரேந்திரன் M
எழுத்தாளர்,
லீட் ப்ரொடெக்ட் கன்சல்டன்ட், CTS

திரு. கருப்பண்ணசாமி T.K
நிர்வாக இயக்குனர், பரணி நிறுவனக் குழுமம்,
குழுமத்தலைவர், ஜெய் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்கள்

திருமதி பாகிரதி
தொழிலதிபர், பேசில் வித் ட்விஸ்ட் ரெஸ்டாரெண்ட்

ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்

46 மாணவர்களுக்கு கற்கை நன்றே திட்டத்தின்கீழ் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது

கற்கை நன்றே கல்வி திட்டத்தில் ஏற்கனவே கல்வி ஊக்கத்தொகை பெறும் மாணவர்களோடு நடப்பு கல்வியாண்டில் கல்லூரியில் இணைந்து பயின்று வரும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் உட்பட 46 மாணவர்களுக்கு கற்கை நன்றே திட்டத்தின்கீழ் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

விழாவில் 1 மாணவருக்கு லேப்டாப் வழங்கப்பட்டது

ஆண்டிற்கு இருமுறை நடைபெறும் கற்கை நன்றே கல்வி விழாவில் மாணவர்களுக்கு ஊகத்தொகை மட்டுமல்லாது அவர்களின் கல்வி தேவைகள் கருதி தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து லேப்டாப்களையும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை வழங்கி வருகிறது.

அதன்படி 11 ஆகஸ்ட் 2024 அன்று நடைபெற்ற விழாவில் லேப்டாப் 1 மாணவருக்கு அவர்களது கல்விக்கு தேவை கருதி வழங்கப்பட்டது.

இம்மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மட்டுமல்லாது அவர்கள் சார்ந்த துறையில் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்படுகின்றன.

ACTA Courses Launch:

ஆனந்த சைதன்யா அறக்கட்டளை மாணவர்களும், வேலைவாய்ப்பு தேடுவோரும், ஏற்கனவே பணியில் இருப்பவர்களும் பட்டப்படிப்புகளோடு மட்டும் நின்றுவிடாமல் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்கள் அவர்களது சர்ந்த துறையில் சிறந்து விளங்க வைக்கமுடியும் என்ற நோக்கத்தில் துவங்கப்பட்டதுதான் ஆனந்த சைதன்யா ட்ரெயினிங்க் அகாடெமி (Ananda Chaitanya Training Academy – ACTA).

ஆனந்த சைதன்யா ட்ரெயினிங்க் அகாடெமியில் அந்தந்த துறைகளில் பல ஆண்டுகள் அனுபமுள்ள திறமையான ஆசிரியர்களை கொண்டு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் https://acta.anandachaitanya.org/ என்ற இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த பயிற்சி வகுப்புகளை எழுத்தாளர் மற்றும் CIET கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் திரு. நாகராஜன் N அவர்கள் கற்கை நன்றே கல்வி விழாவில் துவங்கி வைத்தார்.

நிறைவு உரை

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் அனைத்து ஞான குருமார்களையும், ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்த அவர் அறங்காவலர்கள், நன்கொடையாளர்ககள், பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் உட்பட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *