“Karkai Nandre” Educational Scholarship Award Ceremony – 22 February 2026 | “கற்கை நன்றே” கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா

22 பிப்ரவரி 2026, கோவை

கோவை குரும்பபாளையத்தில் இயங்கி வரும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்களின் கல்லூரிக் கல்விக்காக உதவித்தொகை வழங்கும் “கற்கை நன்றே” கல்வி ஊக்கத்தொகை திட்டம் மற்றும் அனைத்து இளைஞர்களுக்குமான திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை பல ஆண்டுகளாக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் கற்கை நன்றே கல்வி விழா, 22-02-2026 அன்று குரும்பபாளையம் ஆனந்த சைதன்யா தியான மையத்தில் நடைபெற்றது. உளக்குவிதலையும் மன ஒருமைப்பாட்டையும் தரக்கூடிய தியானப் பயிற்சியுடன் விழா தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் Embedded Programming திறன்களை மேம்படுத்தும் நோக்கில் SigmaPwr DSP கருவிக்கான பயிற்சி மற்றும் அறிவுப் பகிர்வுக்கான வலைதளங்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன.

இந்த விழாவில் பொறியியல், மருத்துவம் மற்றும் கலைப் படிப்புகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கற்கை நன்றே உதவித்தொகையின் மூலம் கல்லூரிப் படிப்பை முடித்து தற்போது பணியில் அமர்ந்துள்ள மாணவர்களுக்கு “கற்கை நன்றே சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் துபாய் விமானத் துறை தனியார் நிறுவன இயக்குநர் சிவ ஆனந்த் மற்றும் எழுத்தாளர் விஜய் குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிறைவு உரையில், ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் தில்லை செந்தில் பிரபு அவர்கள், ஜப்பானிய இக்கிகய் முறையை விட காலத்தால் முற்பட்ட நமது பாரத மரபில் கூறப்படும் அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு புருஷார்த்தங்களை வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கொண்டு, மரபின் நெறிநூல்கள் உரைத்தபடி அறிவைப் பயன்படுத்தி வாழ்ந்தால் மனிதன் இந்த மண்ணில் நல்ல முறையில் வாழ முடியும் எனக் குறிப்பிட்டார்.

கல்விப் பணிகளுடன் இணைந்து, மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க ‘வாசிப்போம் வாங்க’ போன்ற வாசிப்புப் போட்டிகளையும், மன ஒருமைப்பாட்டிற்காகப் பிரத்யேக தியானப் பயிற்சிகளையும் இந்த அறக்கட்டளை தொடர்ச்சியாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியை ஆனந்த சைதன்யா அறக்கட்டளை தன்னார்வலர்கள் சண்முகசுந்தரம், ராஜமுருகன், சசிகுமார், ஹரி கோவிந்தன், செல்வகுமார், ரவி, தினேஷ், விஷ்வா, அபிராமி உள்ளிட்ட பலர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

The Ananda Chaitanya Foundation, functioning at Kurumbapalayam in Coimbatore, has been consistently implementing the “Karkai Nanre” Educational Scholarship Scheme to support higher education for economically underprivileged yet meritorious students. In addition, the foundation has been conducting skill development training programs for youth over several years.

The Karkai Nanre Education Festival, held once every six months, took place on 22-02-2026 at the Ananda Chaitanya Meditation Centre, Kurumbapalayam. The event commenced with a meditation session designed to enhance mental clarity and inner focus.

As part of the program, dedicated websites for Sigma DSP tools were formally launched to support students’ embedded programming skill development and hands-on learning.

During the event, educational scholarships and special awards were presented to over 40 students from engineering, medical, and arts disciplines. Additionally, students who had successfully completed their college education through the Karkai Nanre scholarship scheme and are now employed were honored with the “Karkai Nanre Achiever Award.”

The event featured special addresses by Siva Anand, Director of a private aviation-sector company in Dubai, and noted writer Vijay Kumar.

In his valedictory address, the founder of Ananda Chaitanya Foundation, Thillai Senthil Prabu, highlighted that long before the popular Japanese Ikigai concept, Indian tradition had already defined a holistic life framework through the four Purusharthas—Dharma (righteousness), Artha (prosperity), Kama (fulfillment), and Moksha (liberation). He emphasized that aligning one’s life with these timeless principles, as guided by classical scriptures, enables a meaningful and balanced life.

Alongside educational initiatives, the foundation continues to promote a reading culture among students through initiatives such as “Vasippom Vaanga” reading competitions, and conducts exclusive meditation programs aimed at strengthening mental focus and emotional balance.

The event was successfully coordinated by Ananda Chaitanya Foundation volunteers Shanmugasundaram, Rajamurugan, Sasikumar, Selvakumar, Hari Govindan, Ravi, Dinesh, Vishva, Abirami, and several others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *