கோவை, 6 ஏப்ரல் 2024
கடந்த மார்ச் (2024) மாதம் கோவை வீரியம்பாளைம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட தொடர் புத்தக வாசிப்பு போட்டிகளில், 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில், சிறப்பாக செயல்பட்ட 25 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வீரியம்பாளைம் மாநகராட்சி நடு நிலைப்பள்ளியில் ஏப்ரல் 4 (2024) அன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொடர்பான செய்தி இந்து தமிழ் நாளிதழில் 06.04.2024 அன்று வெளியானது