கோவை, நவம்பர் 2023.
கோவை குரும்பபாளையத்திலிருந்து செயல்படும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக “வாசிக்கலாம் வாங்க” என்ற இயக்கத்தை பள்ளி, கல்லூரிகளில் நடத்தி வருகிறது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, கடந்த நவம்பர் மாதம் (2023) கோவை வீரியாம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுடன் புத்தக வாசிப்பின் மகத்துவத்தை எடுத்துரைத்து வேடிக்கையான விளையாட்டுகளுடன் கூடிய ஒரு கலந்துரையாடலை ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியை பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.உமா ஒருங்கிணைத்தார். புத்தக வாசிப்பு இயக்கம் குறித்து பேசிய ஆனந்த சைதன்யா அறக்கட்டளை நிறுவனர் தில்லை செந்தில் பிரபு, “புத்தக வாசிப்பு என்பது அறிவு வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. புத்தகங்களை வாசிப்பதன் மூலம், மாணவர்கள் தங்கள் அறிவை விரிவுபடுத்தலாம், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம், தங்கள் சிந்தனைத் திறனை மேம்படுத்தலாம். இந்த இயக்கத்தின் மூலம், இளைஞர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதே நமது நோக்கம்” என்று கூறினார்.