கோவை : 24 ஜனவரி 2024
கோவை குரும்பபாளையத்திலிருந்து செயல்படும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக “வாசிக்கலாம் வாங்க” என்ற இயக்கத்தை பள்ளி, கல்லூரிகளில் நடத்தி வருகிறது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, கோவை நேரு நகரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் வாசிப்பு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் நடத்தப்பட்ட புத்தக வாசிப்பு போட்டிகளில், 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், சிறப்பாக செயல்பட்ட 6 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா 24.01.2024 அன்று நடைபெற்றது.
விழாவில், ஆனந்த சைதன்யா அறக்கட்டளை நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.
இந்த விழாவை பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. சீதா லட்சுமி ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில், அறக்கட்டளை தன்னாவலர்கள் அன்பரசன், ராஜமுருகன், தினேஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
புத்தக வாசிப்பு இயக்கம் குறித்து பேசிய ஆனந்த சைதன்யா அறக்கட்டளை நிறுவனர் தில்லை செந்தில் பிரபு, “புத்தக வாசிப்பு என்பது அறிவு வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. புத்தகங்களை வாசிப்பதன் மூலம், மாணவர்கள் தங்கள் அறிவை விரிவுபடுத்தலாம், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம், தங்கள் சிந்தனைத் திறனை மேம்படுத்தலாம். இந்த இயக்கத்தின் மூலம், இளைஞர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதே நமது நோக்கம்” என்று கூறினார்.
இந்த விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல்:
நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடையே நடபெற்ற வாசிப்பு போட்டியில் வெற்றி வெற்றவர்கள்.
முதல் பரிசு: A.சாதனா ஸ்ரீ – ஐந்தாம் வகுப்பு,
இரண்டாம் பரிசு: N.R.சுபா- நான்காம் வகுப்பு,
மூன்றாம் பரிசு: G.K.ரஷ்மிகா – ஐந்தாம் வகுப்பு.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களிடையே நடபெற்ற வாசிப்பு போட்டியில் வெற்றி வெற்றவர்கள்.
முதல் பரிசு: R.ஹரிஷ் -ஆறாம் வகுப்பு,
இரண்டாம் பரிசு: M.சுபாஷ் சந்திர போஸ் – ஆறாம் வகுப்பு,
மூன்றாம் பரிசு: R.அபிநயா – ஏழாம் வகுப்பு.