பிப்ரவரி 23,2025-கோவை : ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாக நடைபெறும் கற்கை நன்றே கல்வி விழா 23.02.2025 அன்று குரும்ப பாளையம் ஆனந்த சைதன்யா தியான மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொறியியல், மருத்துவம் மற்றும் கலை படிப்புகளை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு உதவித் தொகை, சிறப்பு பரிசுகள் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.
- “கற்கை நன்றே” கல்வி விழா – 2025 அன்று இணைய வழி திறன் மேம்பாட்டு வகுப்புகள் மற்றும் புத்தகங்கள் வெளியிடப் பட்டது.
- “கற்கை நன்றே” கல்வி விழா – 2025 அன்று உதவித் தொகை பெற்று, கல்லூரிப் படிப்பை முடித்து, வேலையில் அமர்ந்த பத்து மாணவர்களுக்கு “கற்கை நன்றே சாதனையாளர்” விருது வழங்கப்பட்டது