கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புத்தக வாசிப்பு போட்டி பரிசளிப்பு விழா

5 மார்ச் 2026, கரூர்

வாசிக்கலாம் வாங்க – புத்தக வாசிப்பு இயக்கம் பரிசளிப்பு விழா!!

கோவை ஆனந்த சைதன்யா அறக்கட்டளை மற்றும் கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து கல்லூரி மாணவர்களிடைய புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 24 & 25 பிப்ரவரி 2026 அன்று கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாசிப்பு போட்டிகளை நடத்தியது.

வாசிப்பு போட்டியில் சுமார் 32 மாணவர்கள் பங்கு பெற்றனர்……ஒவ்வொரு துறையிலிருந்தும் ஒரு ஆசிரியர் வீதம் மொத்தம் ஐந்து நடுவர்கள் மதிப்பீடுகளை செய்தனர். மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் புத்தகங்களை தேர்வு செய்து, அதனைப் படித்து மிகச் சிறப்பாய் தங்களது வாசிப்பு திறமையினை வெளிப்படுத்தினர்.

பரிசளிப்பு விழா

புத்தக வாசிப்பு போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாணவர்களுக்கு ஆனந்தசைதன்யா அறக்கட்டளையின் சார்பில் பரிசளிப்பு விழா 5 மார்ச் 2026 அன்று கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

வாசிப்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு

முதல் பரிசாக 5000 ரூபாயும் (ரொக்கப்பணம்+புத்தகங்கள்) வழங்கப்பட்டது

இரண்டாவது பரிசாக 3000 ரூபாயும் (ரொக்கப்பணம்+புத்தகங்கள்) வழங்கப்பட்டது

மூன்றாவது பரிசாக 2000 ரூபாயும் (ரொக்கப்பணம்+புத்தகங்கள்) வழங்கப்பட்டது

ஆறுதல் பரிசாக ஏழு மாணவர்களுக்கு 1000 ரூபாயும் (ரொக்கப்பணம்+புத்தகங்கள்) வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *