கடந்த நவம்பர் 7 ஆம் தேதி 2024 (குரோதி வருடம், ஐப்பசி மாதம் 21 ஆம் நாள்) வியாழக்கிழமை காலை 5:30 மணிமுதல் 9 மணிவரை பூராட நட்சத்திரம், சஷ்டி திதி, சித்தயோகம் கூடிய சுபதினத்தில், கோவை குரும்பபாளையம் TRS அவென்யூவில் அமைந்துள்ள எங்கள் புதிய இல்லமான “ஆனந்த சைதன்யா தியான மையத்தில்” தேவி புவனேஸ்வரி சமேத யோக சதாசிவருக்கு பிராணப்பிரதிஷ்டை விழா இனிதே நடைபெற்றது. யோகா, தியானம் மற்றும் பிற நல வாழ்வுக்கான செயல்முறைகளை கற்பதற்கான தலமாக இந்த தியான மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் ஆன்மீக நண்பர்கள், தியான அன்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டு இறையருளுக்கு பாத்திரரானார்கள்.
இவ்விழாவில் கணபதி ஹோமம், புண்யாகவாசனம், திரவியாகுதி, மகா பூர்ணாகுதி, பிராணப் பிரதிஷ்டை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன, தொடர்ந்து மகா பிரசாத விநியோகம் செய்யப்பட்டது.
நல்வரவிற்கு நன்றிகள்!!!
அன்புடன்
திரு.தில்லை செந்தில் பிரபு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்
ஆனந்த சைதன்யா தியான மையம்
C ப்ளாக், சைட் நெ.2, TRS அவென்யூ,
குரும்பபாளையம், கோவை- 641 107
(ஆதித்யா பள்ளியின் பின்புற
நுழைவாயிலுக்கு அருகில்)