ஈரோடு, 29 நவம்பர் 2024
ஆனந்த சைதன்யா உளக்குவிப்பு – தியான பயிற்சி முகாம் ஈரோடு அருகே உள்ள மலைதங்குமிடத்தில் நவம்பர் 29, 30 & டிசம்பர் 1 – 2024 ஆகிய நாட்களில் நடைபெற்றது
ஆனந்த சைதன்யா உளக்குவிப்பு – தியான பயிற்சி முகாமில் பல்வேறு துறை சார்ந்த 40 நபர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு யோகா மற்றும் தியானப்பயிற்சியின் பலன்களை அடைந்தனர்.
எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த தியான முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு தியான பயிற்சிகளை இந்த துறையில் 25 வருடங்களுக்கும்மேல் அனுபவம் வாய்ந்த யோகா ஆசிரியர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் வழங்கினர்.