கோவை 26 பிப்ரவரி 2023: ஆனந்த சைதன்யா அறக்கட்டளை ஆசிரியரின் கல்விப்பணிகளை பாராட்டும் விதமாக “நட்சத்திர ஆசிரியர் விருது”களை ஆண்டுதோறும் பெருமையுடன் வழங்கி வருகிறது.
ஆனந்த சைதன்யா அறக்கட்டளை கல்வியில் சிறந்து விளங்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களது உயர்கல்விக்கு “கற்கை நன்றே” எனும் திட்டத்தின் கீழ் கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. கடந்த 26, பிப்ரவரி 2023 அன்று கோவை சத்தி சலையில் உள்ள ஸ்வர்ணா ஹாலில் கற்கை நன்றே கல்வி விழா நடத்தப்பட்டு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இந்த விழாவில், 2023 ஆண்டிற்கான “நட்சத்திர ஆசிரியர் விருது-2023” கோவை நேருநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. சீதாலட்சுமி அவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க “வாசிக்கலாம் வாங்க” எனும் புத்தக வாசிப்பு திட்டத்தை முன்னெடுக்கிறது. இத்திட்டத்தை கோவை நேருநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிறப்பான முறையில் செயல்படுத்த அப்பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் தன்னார்வலர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கியதற்கு பாரட்டும் விதமாக விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் முன்னிலையில் கல்வி கடவுளான சரஸ்வதி தேவி சிலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.