“கற்கை நன்றே” கல்வி விழா – 2025

பிப்ரவரி 23,2025-கோவை : கோவை குரும்பபாளையத்தில் இயங்கி வரும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்களின் கல்லூரிக் கல்விக்கு உதவித்தொகை வழங்கும் “கற்கை நன்றே”கல்வி ஊக்கத்தொகை திட்டம் மற்றும் அனைத்து இளைஞர்களுக்குமான திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை பல வருடங்களாக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் AOSTA சாஃப்ட்வேர் நிறுவன இயக்குனர் அரவிந்த், இதய நிபுணர் Dr. ராஜராஜன், துபாய் விமானத் துறை தனியார் நிறுவன இயக்குனர் சிவ ஆனந்த், எழுத்தாள விஜய் குமார் ஆகியோர் உரையாற்றினார்கள்.

ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் நிறைவு உரையில் கல்வி,பொருள் தேடும் கருவியாக மட்டும் அல்லாது, அறத்தின் வழியில் வாழ்ந்து, அகவாழ்வில் ஞானமும் ஆனந்தமும் அடைய உதவுவதே அறக்கட்டளையின் நோக்கம் எனக் குறிப்பிட்டார்.

ஆனந்த சைதன்யா அறக்கட்டளை தன்னார்வலர்கள் சண்முகசுந்தரம், ராஜமுருகன், சசிகுமார், விக்னேஷ், சுரேஷ் மற்றும் பலர் ஒருங்கிணைத்தனர்.

இந்த நிகழ்வு 24 பிப்ரவரி 2025 அன்று தமிழ் இந்து மற்றும் தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *