அன்பு ஆசிரியர் அவர்களுக்கு !
தங்களுக்கு என்னுடைய நன்றியை வெளிப்படுத்தும் பொருட்டு இதை எழுதுகிறேன் ….
கடந்த சில நாட்களாக நூலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் உண்மையிலேயே மிகப் பெரும் ஆனந்தத்தினை ஏற்படுத்துகிறது …… ஒவ்வொரு துறை மாணவர்களும் அவர்களது நூலக வகுப்பு நேரத்தில் ஏதாவது புத்தகத்தினை எடுத்து படித்து அதை வெளிப்படுத்தும் விதம் மிக வியப்பாய் உள்ளது …..
ஒவ்வொரு மாணவரின் திறமையினையும் பார்க்கும் பொழுது ஆசிரியராய் ஆச்சரியத்தில் உறைந்து போகிறேன் …… தாங்கள் தியானத்தின் வாயிலாக பலருடைய வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளதை கண்கூடாக பார்த்திருக்கிறோம்……

அதுபோல் நூலகம் மற்றும் வாசிப்பு இயக்கத்தின் வாயிலாக நிகழும் இந்த மாற்றங்களை பார்க்கும் போது மிகவும் ஆனந்தமாக உள்ளது ….. நூலகத்தில் இருக்கும் ஒவ்வொரு கணமும் பேரானந்தமாய் உணர்கிறேன் ……
இப்படி ஒரு சூழ்நிலையை அமைத்து கொடுத்ததற்காக எல்லையற்ற நன்றிகளை தங்களிடம் வெளிப்படுத்திக்கொள்கிறேன் …… மிக்க நன்றி ……

மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் சார்பில் கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நூலக வாசிப்பு அறை மற்றும் நூலகம் மேம்படுத்துவதற்கு உதவி செய்யப்பட்டது.
கல்லூரியில் நூலகம் அமைந்த பிறகு மாணவர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கம் அதிகரித்திருப்பது குறித்து கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர் திரு. செல்வகுமார் அவர்கள் நன்றியை வெளிப்படுத்தும் பொருட்டு நூலகம் மேம்படுத்துவதற்கு உதவி செய்த ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். இது அந்த கடிதத்தின் தொகுப்பு.
திரு. செல்வகுமார்
விரிவுரையாளர், கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி
