வாசிக்கலாம் வாங்க – புத்தக வாசிப்பு இயக்கம்
“புத்தக வாசிப்பு உள்ளத்தை ஒளிர செய்யும்” – கோவை வீரியம்பாளையம் மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை நடத்திய புத்தக வாசிப்பு போட்டி
கோவை : 4 ஏப்ரல் 2024
கோவை குரும்பபாளையத்திலிருந்து செயல்படும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி மாணவர்களிடையே “வாசிக்கலாம் வாங்க” என்ற இயக்கத்தை நடத்தி வருகிறது.
கடந்த மார்ச் (2024) மாதம் வீரியம்பாளைம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட தொடர் புத்தக வாசிப்பு போட்டிகளில், 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதில், சிறப்பாக செயல்பட்ட 25 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வீரியம்பாளைம் மாநகராட்சி நடு நிலைப்பள்ளியில் பள்ளியில் ஏப்ரல் 4 (2024) அன்று காலை நடைபெற்றது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. உமா மகேஸ்வரி, ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு மற்றும் தன்னார்வலர்கள் சண்முகசுந்தரம், ராஜமுருகன், அன்பரசன், பிரதீப், தினேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ்கள் மற்றும் புத்தகப்பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் பேசும்போது “புத்தக வாசிப்பு என்பது அறிதலில் தொடங்கிஅதை அனுபவ ஞானமாக ஆக்கும் செயலின் முதல்படி. இது அறியாமை என்கின்ற தாமஸ இருளை நீக்கி உள்ளொளியை வளரச்செய்வதால் ஒரு நிறைவான வாழ்வு மனிதனுக்கு கிடைக்கும். எனவே சிறு வயதில் இருந்தே வாசிப்பை பழக்கமாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில் தலைமை ஆசிரியர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
கோவை, வீரியம்பாளையத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் “வாசிக்கலாம் வாங்க” புத்தக வாசிப்பு இயக்கத்தின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
17 அக்டோபர் 2023, கோவை.
வீரியம்பாளையத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுடன் “வாசிக்கலாம் வாங்க” புத்தக வாசிப்பு இயக்கத்தின் அறிமுக கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.உமா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் புத்தக வாசிப்பின் நன்மைகள் பற்றி பள்ளி மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
வாசிக்கலாம் வாங்க – புத்தக வாசிப்பு இயக்கம் பரிசளிப்பு விழா
சரவணம்பட்டி ஷாஜகான் நகரிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட தொடர் புத்தக வாசிப்பு போட்டிகளில் பங்குபெற்ற 80 க்கும் மேற்பட்ட மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட18 சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா 14.07.2023 அன்று நடைபெற்றது.
பரிசுகளாக ரொக்கத்தொகை, புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
புத்தக வாசிப்பு இயக்கம் சார்பாக இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
கோவை, ஷாஜகான் நகரிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் “வாசிக்கலாம் வாங்க” புத்தக வாசிப்பு இயக்கத்தின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
கோவை, ஷாஜகான் நகரிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுடன் “வாசிக்கலாம் வாங்க” புத்தக வாசிப்பு இயக்கத்தின் அறிமுக கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் தில்லை செந்தில் பிரபு அவர்கள் புத்தக வாசிப்பின் நன்மைகள் பற்றி பள்ளி மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
Vasikkalam Vaanga
An awareness talk on book reading is given by Thillai senthil prabu for students of Corporation middle school Shajakhan nagar, Coimbatore. This is followed by a group discussion with students who have enrolled themselves for the book reading competition. The importance of reading books in one’s life is discussed.
“ வாசிக்கலாம் வாங்க”
புத்தக வாசிப்பு இயக்கம்
ஒரு குழந்தை க்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்
– வின்ஸ்டன் சர்ச்சில்..
புத்தகமே ஒரு மனிதனின் மிகச்சிறந்த நண்பன் என்பது சத்திய வாக்கு. எந்தத் துறையில் ஆனாலும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை எட்டியவர்கள் பெரும்பாலும் பல நூல்களையும் கற்றுணர்ந்த சிறந்த வாசிப்பாளர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் இந்த காலகட்டத்தில் புத்தக வாசிப்பு மிகவும் குறைந்து போயிருப்பது உண்மை.
பள்ளிப் படிப்பில் மதிப்பெண்களுக்காக பாடப்புத்தகம் படிப்பது தாண்டி மற்ற புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் ஒரு மாணவனுக்கு மிகச்சிறந்த. பலன்களைத் தரும்.
● கற்பனைத் திறன், புதியன உருவாக்கும் திறமை உருவாகும்
● கற்றவர் கூடியுள்ள சபையில் தன் மனதில் பட்டதை எடுத்துக் கூறும் தெளிவும் தைரியமும் ஒரு வாசகனுக்கே வரும்.
● புத்தி கூர்மை அடை யும்.
● கற்றதை வாழ்க்கையில் எங்கு பயன்படுத்துவது என்று தெளிவு பிறக்கும்.
● தொழிலோ வியாபாரமோ எதுவாய் இருந்தாலும் சுயசிந்தனை உள்ளவனுக்கே வெற்றி வசப்படும். ஒரு வாசகனுக்கே அது கைகூடும்.
● அனைத்துக்கும் மேலாக “ யாதும் ஊரே யாவரும் கே ளிர் “ என்கிற அகண்ட விசாலமான பார்வை வாசிப்புப் பழக்கம் உள்ளவருக்கே சாத்தியமாகும்.
தற்காலத்தில் காட்சி ஊடகங்கள் மற்றும் தொடுதிரை தொலைபேசிகளின் தாக்கத்தால் வாசிப்பு மிகவும் குறைந்து கொண்டிருக்கிறது. உலகில் வளர்ச்சியடை ந்த அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் புத்தக வாசிப்புக்கு பெரும் முக்கியத்துவம் தருகிறார்கள்.
நம் நாட்டில் தொழில் கல்வி பெறும் பட்டதாரிகள் அந்நாட்டு நிறுவனங்களின் பணிகளை முடித்துத் தரும் வேலையாட்களாகவே மாறிக்கொண்டிருப்பது தான் நடை முறை சூழல். அவ்வாறன்றி சுயமாக சிறந்த விஷயங்களை முன்னெடுத்துச் செல்ல புத்தகங்கள் மிகவும் சிறந்த கருவியாகும்.
புத்தக வாசிப்பை நம் இளைஞர்களின் வாழ்வின் ஒரு முக்கிய பாகமாக மாற்றும் விதமாக முன்னெடுக்கப்பட்ட திட்டம் தான் “ வாசிக்கலாம் வாங்க” என்கிற மாவட்ட அளவிலான புத்தக வாசிப்பு.
ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக , கல்வியாளர்கள் , இலக்கிய ஆர்வலர்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்கிறது.
திட்டத்தின் செயல்பாடுகள் :
- தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் பள்ளி அளவிலான புத்தக வாசிப்புப் போட்டியை நடத்தலாம்.
- ஒவ்வொரு பள்ளியிலும் 8ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொள்ளலாம். (6, 7 வகுப்பு பயிலும் மாணவர் கலந்துகொள்ள விரும்பினால் தடையேதும் இல்லை).
- குறைந்தபட்சம் 50 மாணவர்கள் பங்கெடுப்பது உகந்தது. அதிக பட்சம் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
- புத்தகம் குறைந்த பட்சம் 75 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
- நன்னெறிக் கதைகள், நாவல்கள், ஐம்பெரும் காப்பியங்கள், இதிகாசங்கள் ,புராணங்கள், கட்டுரைகள், கவிதை நூல்கள் மொழி பெயர்ப்பு நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள், சுய சரிதைகள், சிறந்த மனிதர்களின் வரலாறுகள் என புத்தகங்கள் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
- பள்ளி நூலகங்களிலோ, பொது நூலகங்களிலோ அல்லது சொந்தமாகவோ வாங்கிகொள்ளலாம்.
- பொது நூலகத்தில் சேர விரும்பும் மாணவருக்கு தேவைப்பட்டால் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை நூலகக் கட்டணத்தை வழங்கும்.
- பள்ளி அளவில் நடக்கும் போட்டியில், வாசித்த புத்தகத்தை புத்தகத்தைப் பற்றி பேசி காணொளியாக பதிவேற்றலாம். பதிவேற்றும் முறை பின்னர் தெரிவிக்கப்படும்.
- குறிப்புகள் வைத்துக் கொண்டும் உரையாற்றலாம். குறைந்தது 5 நிமிடம் பேசுவது வரவேற்கத்தக்கது.
- போட்டியில் சிறந்த 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்படுவார்கள்.
- தேர்வுக் குழுவில் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், இலக்கிய வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களும் பங்கெடுப்பார்கள்.
- பங்கு கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான வாசிப்பு போட்டி
- பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் கல்வி மண்டல அளவில் புத்தக வாசிப்பு போட்டி நடத்தப்படும்.
- அனைத்துப் பள்ளிகளின் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்கள் இதில் பங்கெடுப்பார்கள்.
- மாணவர்கள் ஒரு புதிய புத்தகத்தை த் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.(தேர்வுக் குழுவின் பரிந்துரைகளில்)
- ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் சிறந்த 10 மாணவர்கள் தே ர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- ஒவ்வொரு மண்டலத்தின் முதல் மூன்று மாணவர்கள் சான்றிதழும் பரிசும் அளிக்கப் படுவார்கள்.
இறுதிச்சுற்று:
- தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது மாணவர்கள் இதில் பங்குபெறுவார்கள்.
- தேர்வுக் குழுவின் பரிந்துரைகளில், ஒரு புதிய புத்தகத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
- வாசித்த புத்தகத்தினை குறித்து 10 நிமிடம் உரையாற்ற வேண்டும்.
- வெற்றி பெற்ற முதல் பத்து மாணவர்களுக்கு பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும்.
- முதல் கட்ட அளவிலான போட்டி ஆன்லைன் காணொளி மூலமாகவும் மற்ற கட்ட போட்டிகள் நேரடியாகவும் நடத்தப்படலாம்.
- ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரு பெரும் இயக்கமாக இந்த வாசிப்பை முன்னெடுப்பதும் அதைப் பற்றி பேசுவதும் பகிர்வதும் ஒரு பெரும் எழுச்சியை ஒரு அறிவு இயக்கத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்கும்.
- இது மாணவர்களின் நல்வாழ்வுக்கு மட்டுமன்றி நாட்டின் எதிர்காலத்துக்கும் பெரும் அடித்தளம் ஆகும் என்பது திண்ணம்.
Vaasikkalam vaanga – Awarness Camp
Vasikkalam vaanga
An awareness talk on book reading is given by Thillai senthil prabu for 600+ students of Corporation school .
This is followed by a group discussion with 70+ students who have enrolled themselves for the book reading competition.
The importance of reading books in one’s life is discussed.
Selection Process -Vaasikkalam Vaanga
Book reading movement is initiated for the last one month and the book reading competition is being conducted at Nehru nagar Corporation school.
More than 80 students from class 4 to class 8 are participating with high enthusiasm. Teachers and foundation volunteers are involved in participating the selection process along with school teachers.
Price Distribution Ceremony
Ananda Chaitanya Foundation has conducted book reading competition to the students of Government Middle School, Nehru Nagar, Coimbatore. The students from 4th Std to 8th Std. are Participated in this “Vaasikalaam Vaanga” book reading movement of Ananda Chaitanya Foundation. All the participants are given the Certificates. The winners from each standards are given the Certificates, books and cash prizes. The Prize distribution function was conducted on 26th January 2023 at the School campus. Several volunteers of Ananda Chaitanya Foundation participated with great enthusiasm.
Sharings:
வாசிப்பு என்பது தனி மனிதன் சம்பந்தப்பட்டதல்ல. சமூகத்தின், இந்த தேசத்தின் மேம்பாட்டுக்கானது. எங்கெல்லாம் வாசிப்புகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் சமூக, பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். மனிதன் உயிர் வாழ சுவாசிக்க வேண்டும். இந்த சமூகம் உயிர்வாழ வாசிக்க வேண்டும். ஆனந்த சைதன்யாவின் முயற்சி, பல்லாயிரம், பல லட்சம், பல கோடி குழந்தைகளை எட்டட்டும். ஞானம் மிக்க இளைஞர்களை உருவாக்கட்டும். வாழ்த்துக்கள் தில்லை அண்ணா….!
விஜயகுமார் கந்தசாமி
செய்தி ஆசிரியர் – தினமலர்