கோயம்புத்தூர் 22 ஜூன் 2024,
கோயம்புத்தூரில் இயங்கி வரும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை கல்வியில் சிறந்து விளங்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கிட கற்கை நன்றே எனும் திட்டத்தின் மூலம் கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
இயந்திராமாகிப் போய்விட்ட இன்றைய மனித வாழ்க்கையில் உடல் ஆரோக்யம், மன வலிமை, ஆன்மீக நலவாழ்வு, உணர்வுகளின் சமநிலை ஆகியவற்றோடு அன்றாட வாழ்விற்கான ஆன்மீகக் கருவிகளையும் சக்திவாய்ந்த பிராணயாமா, யோகா மற்றும் தியான பயிற்சிகளையும் ஆனந்த சைதன்யா யோகா மற்றும் தியான பயிற்சி வகுப்புகளின் மூலம் வழங்கி வருகிறது.
மாணவர்களின் தனித்திறைமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வையத்தலைமை கொள் எனும் திட்டத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறது.
பள்ளி மாணவர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வாசிக்கலாம் வாங்க எனும் திட்டத்தினை பள்ளிகளில் நடத்தி வருகிறது, இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
கல்விப்பணிகள் மட்டுமல்லாது பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் பல்வேறு நலத்திட்டங்களையும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை நடத்திவருகிறது.
ஆனந்த சைதன்யா அறக்கட்டளை கடந்த சிலவருடங்களாக பிற உயிர்களை காக்க இறைவன் நமக்கு கொடுத்த ஒப்புயர்வற்ற ஒரு வாய்ப்பான இரத்த தானம் வழங்கும் இரத்த தானம் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 22 ஜூன் 2024 அன்று கோவை நேரு நகரிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இரத்ததான முகாமினை ஆனந்த சைதன்யா அறக்கட்டளை நடத்தியது. இதில் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள், பொதுமக்கள், மேக் கண்ட்ரோல் நிறுவன ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.
விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் “பல்வேறு வகையான தானங்கள் கொடையளிக்கப்பட்டாலும் அவை வெளியே இருந்து பெறப்பட்டு பிறர்க்கு அளிக்கப்படுபவை, ஆனால் இரத்ததானம் ஒன்று மட்டுமே நம் உள்ளிருந்து பெறப்பட்டு பிறர்க்கு அளிக்கப்படுகிறது” எனக்கூறினார். தொடர்ந்து பேசிய அவர் இரத்ததான முகாம் நடைபெற்ற கோவை நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. சீதாலட்சுமி அவர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும், இரத்த தானம் வழங்கிய பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் மேக் கண்ட்ரோல் நிறுவன ஊழியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
ஆனந்த சைதன்யா அறக்கட்டளை நடத்திய இரத்ததான முகாமில் 52 பேர் இரத்ததானம் செய்தனர்.
விழாவை ஒருங்கிணைத்து நடத்திய அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் திரு.அன்பரசன், திரு.ராஜமுருகன் ஆகியோருக்கும், மருத்துவ உபகரணங்கள் வழங்கிய கோவை இராமகிருஷ்ணா மருத்துவமனை ஊழியர்களுக்கும், தினமலர் மற்றும் தி ஹிந்து தமிழ் ஆகிய பத்திரிக்கை நண்பர்களுக்கும் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் நன்றிகளை தெரிவித்தார்.