Final interview session for the “karkai nandre” scholarship 2024 held on 4th February, About 6 students got selected for the scholarship.

கோவை, 4 பிப்ரவரி 2024 :

கோவை குரும்பபாளையத்தில் செயல்பட்டு வரும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை கல்வியில் சிறந்து விளங்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இடை நிற்றல் ஆகாமல் கல்லூரி சென்று உயர்கல்வி பயிலும் கனவை நனவாக்க ஆண்டு தோறும் கற்கை நன்றே எனும் திட்டத்தின்கீழ் கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.

கற்கை நன்றே கல்வி ஊக்கத்தொகையின் மூலம் பல மாணவர்கள் கலை, அறிவியல், தகவல் தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவம் உட்பட பல துறைகளில் பல கல்லூரிகளில் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இம்மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மட்டுமல்லாது அவர்கள் சார்ந்த துறையில் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்படுகின்றன.

நடப்பு கல்வியாண்டில் கல்லூரியில் சேரவுள்ள மாணவ மாணவிகளுக்கு பல்வேறு கட்டங்களாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 4 பிப்ரவரி 2024 அன்று இறுதிகட்ட நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இதில் 6 மாணவ மாணவிகள் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் கற்கை நன்றே திட்டத்தில் வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *