ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகையைப்பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குரும்பபாளையத்தில் செயல்பட்டு வரும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் திறமையான ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக “கற்கை நன்றே” என்ற கல்வி ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் குறைந்தது 80 சதவீதம் மதிப்பெண் பெற்று, உயர்கல்வி படிக்க விரும்பும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமே இல்லாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
மாணவர்கள், https://forms.gle/PAtS6gxAK4Q2RWtD9 என்ற ஆன்லைன் லிங்கை பயன்படுத்திஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, தகவலை அனுப்பி தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு
+91 90035 12634,
+91 99943 87233
ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.