வணக்கம்.
“சைதன்ய ஒளி என் மீது வீசுகின்றது” என்று அவர் என்னுள் ஏற்படுத்திய எண்ணத்திலேயே, மூடிய கண்கள் கலங்கி போனதும், தியான முகாம் முடிந்தது என்பதை ஏற்றுக் கொள்ளவே நேரம் எடுத்து, புறப்பட எந்த தயாரிப்பும் செய்யாமல், என் அறை தோழர்களின் புறப்படுதலை பார்த்தே, கிளம்ப முடிவு செய்ததுமே, இந்த முகாமின் தாக்கம் குறித்து, என்னால் வார்த்தையால் சொல்ல முடியக் கூடியது. அதனாலேயே பயிற்சி முடிக்கும்போது, அனைவரும் அனுபவத்தை பேசுகையில், என்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
இந்த கருவிகளை எளிமையாக புரிய வைத்து, இனிமையான சிரிப்புடனும், அக்கறையுடனும், எந்த கேள்விக்கும், முடிவில் “பயிற்சியைத் தொடர்ந்து செய்யுங்கள்” என எவரையும் ஏற்றுக்கொள்ள வைக்கும் ஆளுமை, தில்லை அவர்கள். முகாம் முடிந்து சென்றதும், வீட்டில் பயிற்சிகளை செய்ய, யாரும் அவரை சார்ந்து இருந்துவிடக் கூடாது எனத் தெளிவாக இருந்தார்.
”உடல், மனம், அறிவு, ஆற்றல் – 4 சக்கர வாகனம்”
”மனம் எனும் மாளிகை அறைகளின் மீது விழும் விழிப்புணர்வு எனும் ஒளி கற்றை”
போன்ற எளிமையான உருவகங்கள், மற்றும் தத்துவ கருத்துகளைக் கூறும் போது, “தத்துவத்தை உணராத வரை, கதையாக எடுத்துக் கொள்ளுங்கள்” என கூறினார்.
அனைத்து வகுப்புகளிலும் அடிக்கடி சிரிப்பலைகள் எழுப்பியவாறே இருந்தவர், முகாமின் நிறைவுரையில், பயிற்சிகளைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போதே, சட்டென “Please make use of it” என்று சொல்லிவிட்டு அமைதியானதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.
அனைத்து வகுப்புகளிலும் அடிக்கடி சிரிப்பலைகள் எழுப்பியவாறே இருந்தவர், முகாமின் நிறைவுரையில், பயிற்சிகளைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போதே, சட்டென “Please make use of it” என்று சொல்லிவிட்டு அமைதியானதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.
Master, குரு ஜி, Sir என பலவாக அவரை அழைத்து, எதுவும் எனக்கு உகந்ததாக படவில்லை. வேறு ஒரு சுட்டு பெயரைக் கண்டடைய வேண்டும்.
தில்லை அண்ணா, அவர்களுக்கு மிக்க நன்றி.
இந்த வாய்ப்பை வழங்கிய தங்களுக்கும், நித்யவனத்திற்கும், எங்களை மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொண்ட நித்யவன மேலாண்மை குழுவிற்கும் நன்றி.
வீ. இரவிக்குமார்.
எழுத்தாளர் திரு. ஜெயமோகன்
https://www.jeyamohan.in/183441/ இது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த மே மாதம் (2023) ஈரோடு அருகே நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தவற்றை எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.