Ananda Chaitanya Training Academy is a skill development initiative of Ananda Chaitanya Foundation’s “Vaiya Thalaimaikol” (Lead the World) Project.
English is a global language and a gateway to all-round connectivity
and success. In today’s world, good communication skills in English
is essential for proper grasping of the subject for students, to face
interviews confidently, attain career growth and personality
development above all.
This program shall train the students at the grass root level to
Shed inhibitions.
Speak in English without grammatical errors.
Sentence formation for daily usage.
Develop habits that would be supportive to continuous learning .
Ananda Chaitanya Foundation has started the Spoken English Class on 06.05.2023
Ananda Chaitanya Foundation has started the Spoken English Class on 06.05.2023. There are 80 Students enrolled for this class.
The classes have been started for the 40 students in 3 batches. Three expert trainers from our Volunteers are handling these classes.
The classes for the remaining 40 students will be started as quick as possible.
Few sharing’s of previous spoken English class participants
Srivatsan – Student:
Good Evening Sir. First I would like to thank you Sir for creating such an wonderful opportunity to improve on English language learning skills. Earlier we had learnt only the basics of framing sentences. After attending this class, I learnt how to make simple sentences in an easier way. In this spoken English class, I got familiarize with usage of new words, grammatical mistakes made while framing the sentence structure.
Mam taught us and also corrected the mistakes during the class hours. We are self-motivated in the class and started to speak about a particular topic given. A group was formed with all the students in the class to share the information and also to improve our communication among us. All the members in the class were given opportunity to express their views and share their ideas. My honest review about this spoken English class was very informative and I learnt a lot. I gained confidence to talk clearly without any grammatical errors in front of others.
Priyadharshini – Student:
The Spoken English class was very useful. It helps us to improve on our learning skills. Earlier I was feared to talk in front of others, after attending these classes, it helped me to completely overcome those fears. I leant new words, frame simple sentences without grammatical mistakes. English Grammar was also taught in the class and this Spoken English class was very very useful and informative. I would like to thank Thillai Senthil Prabu sir for giving us such an wonderful opportunity.
Abirami – Student :
ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் ஒரு பகுதி செயல்பாடாக மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் வகுப்பு தொடங்கப்பட்டது. அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு ஐயா அவர்கள் முன்னின்று ஏற்பாடு செய்தார். திருமதி. சாந்தி அம்மா அவர்கள் தாமாக முன்வந்து ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கிலம் கற்பிக்கிறார். ஸ்போக்கன் ஆங்கில வகுப்பிற்கென தனியாக வாட்ஸாப் குழு ஒன்று தொடங்கப்பட்டு அதில் கலந்துரையாடல்கள் வகுப்பிற்கான நேரம் நாள் பதிவிடப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களாக வகுப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை 1 1/2 மணி நேரம் வகுப்பு நடைபெறுகிறது. வகுப்பானது ஆன்லைன் Google meet மூலம் நடைபெறுகிறது. வகுப்பானது அடிப்படை வார்த்தைகள் அடிப்படை ஆங்கிலம், உச்சரிப்பு, ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் விளக்கம், க்ரேமர், சந்தேகங்களுக்கான விளக்கங்கள் என அன்றாட வாழ்வில் பயன்படும் வகையில் மிகச்சசிறந்த விளக்கங்களுடன் கற்பிக்கப்படுகிறது. சாந்தி அம்மா அவர்கள் பாடவேலையின் போது மட்டுமல்லாமல் தினமும் Whatsapp குழுவில் சிறு சிறு செயல்பாடுகளை பதிவிடுவார். நாங்கள் விடைகளைப் பதிவிடுவோம். தவறு ஏதேனும் இருப்பின் அதனைத் திருத்தி கற்பிப்பிபார். இந்த நான்கு மாதங்களில் நான் வார்த்தைகளை எவ்வாறு உச்சரிப்பது ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் விளக்கங்கள், வாக்கியத்தை இலக்கணப் பிழை இல்லாமல் கட்டமைப்பது எப்படி? நிகழ்காலம் இறந்தகாலம் எதிர்காலம் சொற்கள் எப்படி பயன்படுத்துவது? காலம் உணர்ந்து வாக்கியம் கட்டமைப்பது பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.நான்கு மாதங்களில் ஓரளவிற்கு எனது ஆங்கில அறிவாற்றல் வளர்ந்துள்ளது. என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை வளர்ந்துள்ளது. தற்பொழுது நான் சிறு சிறு வாக்கியங்கள் கட்டமைத்து ஆங்கிலத்தில் உரையாடுகிறேன். உடன் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடுகிறேன். நல்ல முறையில் ஆங்கிலத்தில் எழுதுகிறேன். ஆங்கில புத்தகங்கள் மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள் படித்து அதிலுள்ள கருத்தைப் புரிந்துகொள்கிறேன். இவை அனைத்தும் ஆசிரியை திருமதி. சாந்தி அம்மா மற்றும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு ஐயா ஆகியோரால் மட்டுமே சாத்தியம். இனி மேலும் தொடர்ந்து நடைபெறும் வகுப்புகளிலும் நல்ல முறையில் கலந்து கொண்டு மிகச் சிறந்த ஆங்கில அறிவைப் பெறுவேன்.
நன்றி.
Ramu – Student:
வணக்கம் என் பெயர் ராமு. நான் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் B.com இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். நான் இந்த ஆண்டு என் நண்பன் மூலமாக ஆனந்த சைத்தன்யா அறக்கட்டளையில் இணைந்தேன். அறக்கட்டளை நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் அறக்கட்டளையில் உள்ள மாணவர்கள் ஆங்கிலம் பேச தடுமாறுவதை அறிந்து , ஒரு ஆங்கில வகுப்பை ஆரம்பித்தார். விருப்பமுள்ள மாணவர்களை கேட்டு அறிந்து வாட்ஸாப்ப் (whastapp) குழுவில் இணைத்தார். அந்த குழுவில் ஆங்கில நிபுணத்துவம் பெற்ற ஆசிரியை திருமதி. சாந்தி அவர்கள் மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுக்கிறார்.
மாணவர்கள் முதலில் சுய அறிமுகம் செய்து கொள்ள கற்றுக்கொடுத்தார். பிறகு சொற்கள் (ம) சிறு வாக்கியங்களை வைத்து பேச கற்று கொடுத்தார். மாணவர்களிடம் தலைப்பை கொடுத்து அதைப்பற்றிய கருத்தை ஜூம் மீட்டிங் (Zoom Meeting) வகுப்பின் போது பேச வைத்தார். குழுவில் வாக்கியம் (அ) பத்தியை பதிவிட்டு அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க சொல்வார். அவற்றில் பிழைகள் இருப்பின், அவற்றை பொறுமையாக தெளிவாக சொல்லி கற்றுக்கொடுப்பார். குழுவில் சிலர் மட்டுமே தொடர்ச்சியாக பங்கெடுத்தாலும் அவர்களுக்காக முழு ஈடுபாட்டுடன் வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்.
நான் இந்த வகுப்பின் மூலமாக ஆங்கிலத்தில் சிறிது கற்றுக்கொண்டேன். இனிவரும் வகுப்புகளில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு முழு ஈடுபாட்டுடன் ஆங்கிலத்தில் பேசக் கற்றுக்கொள்வேன். இந்த வகுப்பை தொடங்கிய திரு. தில்லை செந்தில் பிரபு அவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் திருமதி. சாந்தி அவர்களுக்கும் மிக்க நன்றி.
Saranya – Student:
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் மூலம் எங்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் வகுப்பு தொடங்கப்பட்டது.
இது கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடந்துவருகிறது. திருமதி. சாந்தி அவர்கள் எங்களுக்கு இந்த வகுப்பை நடத்துகிறார். மிக பொறுமையாகவும் அன்புடனும் சொல்லித்தருகிறார். இந்த வகுப்பின் மூலமாக நான் எவ்வாறு பேச வேண்டும், புது புது ஆங்கில வார்த்தைகளை கற்றுக்கொண்டேன். இது மட்டுமல்லாமல் எங்களுக்கு வகுப்பின் முக்கியத்துவத்தையும் ஒழுக்கத்தையும் உணர்த்தினார். இப்போது என்னால் ஒரு அளவு Fluent ஆக English பேச முடிகிறது. இதற்கு எங்களுக்கு கற்றுக்கொடுத்த திருமதி. சாந்தி அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த ஆனந்த சைதன்யா குழுவிற்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
Alfina – Student:
வணக்கம், எனது பெயர் அல்பினா. இ, நான் பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பி இ கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறேன். நான் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ்வழியிலேயே கல்வி பயின்றேன். அதனால் எனக்கு ஆங்கிலப் புலமை சிறிது குறைவாக இருந்தது. இருப்பினும் எனக்கு ஆங்கிலத்தில் நன்று பேச வேண்டும் நன்கு புலமை பெற வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் ஒருபகுதி செயல்பாடாக ஆங்கில வகுப்பு கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்றது அதில் நான் கலந்து கொண்டேன். என்னுடைய ஆங்கில புலைமைய வளர்த்துக் கொண்டேன் whatsapp குழு வாயிலாகவும் Zoom Meeting வாயிலாகவும் வகுப்பு நடைபெற்றது. whatsapp குழுவில் அன்றாடம் நாம் வாழ்வில் பயன்படுத்தும் அடிப்படைக் சொற்கள் இலக்கணமும் திருமதி. சாந்தி ஆசிரியை அவர்கள் தினமும் கற்பிப்பார். எங்களுக்கு தெரியாத புதிய வார்த்தைகளையும் அதன் ஆங்கில அர்த்தங்களையும் நன்கு கற்று கொண்டோம். தினமும் நாங்கள் பயிற்சி வினாக்களுக்கு விடையளிப்போம். தவறுகளை ஆசிரியை உடனே திருத்துவார். எங்களுக்கு தெரியாத, புரியாத பகுதிகளை குறித்து வைத்துக் கொண்டு வகுப்பில் கேட்போம். ஆசிரியை அவர்கள் அனைவரும் புரியும் வண்ணம் சொல்லித்தருவார். இந்த ஆங்கில வகுப்பு எனக்கு ஆங்கிலத்தில் பேசும் தயக்கத்தை மாற்றி தன்னம்பிக்கையுடன் பேச உதவி செய்திருக்கிறது. வகுப்பில் உள்ள நண்பர்களுடன் ஆசிரியர்களிடத்திலும் ஆங்கிலத்தில் பேச முடிகிறது. வகுப்பில் நடத்தும் பாடத்தை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. செமினார் எடுக்கும் போதும் நமது கருத்துகளை ஆங்கிலத்தில் பகிரவும் இந்த பயிற்சிவகுப்பு மிகவும் உறுதுணையாக உள்ளது. இந்த ஆங்கில பயிற்சி வகுப்பை ஏற்படுத்திய ஆனந்த சைதன்யா அறக்கட்டளை நிறுவனர் அவர்களுக்கும் வகுப்பை சிறப்பாக நடத்தி எங்களை ஆங்கிலத்தில் சிறந்து விளங்க செய்கின்ற திருமதி. சாந்தி ஆசிரியை அவர்களுக்கும் மனமார நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.